சினிமா

மேலாடை இல்லாத புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய மதுஷாலினி

Published On 2018-07-02 12:23 IST   |   Update On 2018-07-02 12:23:00 IST
அவன் இவன், தூங்காவனம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை மதுஷாலினி மேலாடை இல்லாத அரைநிர்வாண படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். #MadhuShalini
நடிகைகள் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் படுகவர்ச்சியான படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது தற்போது வழக்கமாகிவிட்டது. அந்த வரிசையில் மது ஷாலினியும் இணைந்துள்ளார். 

பாலிவுட் நடிகைகளில் ஆரம்பித்து தற்போது, அந்தத் தாக்கம் டோலிவுட், கோலிவுட் என அனைத்துத் திரையுலகிலும் சாதாரணம் ஆகிவிட்டது. ஆந்திராவைச் சேர்ந்தவர் நடிகை மது ஷாலினி. இவர் தமிழில் அவன் இவன், தூங்காவனம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தெலுங்கில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.



இந்த நிலையில், மது ஷாலினி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடை இல்லாத கவர்ச்சியான அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #MadhuShalini

Tags:    

Similar News