சினிமா

பிரபுதேவாவை திருமணம் செய்ய ஆசைப்படும் பிரபல நடிகை

Published On 2018-05-13 11:29 IST   |   Update On 2018-05-13 11:29:00 IST
இயக்குனர், தயாரிப்பாளர், டான்சர், நடன இயக்குனராக இருக்கும் பிரபுதேவை, தற்போது பல படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார். #Prabhudeva
தற்போது கஸ்தூரி ராஜா இயக்கத்தில் பாண்டி முனி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் நிகிஷா படேல். இதையடுத்து, இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்துள்ளது. இதன் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நிகிஷா கூறுகையில், தனக்கு இந்தி படங்களில் வாய்ப்பு வரும் நிலையில், முன்னணி நடிகருக்கு ஜோடியாகவும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

கொமரம் புலி என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர், கடந்த 2014ம் ஆண்டு வந்த தலைவன் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில், பிரபுதேவாவை தனக்கு பிடிக்கும் என்றும், அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக, கடந்த ஏப்ரல் 3ம் தேதி தனது 45வது பிறந்தநாளை கொண்டாடிய பிரபுதேவாவுக்கு தனக்கேயுரிய பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 



தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் பிரபுதேவா. நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், டான்சர், நடன இயக்குனராக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், ஏற்கனவே நயன்தாராவுடன் காதல் கொண்டிருந்த பிரபுதேவா, அவரது மனைவியிடமும் விவாகரத்து பெற்றார். இதையடுத்து நெருக்கமாக இருந்த பிரபுதேவா – நயன்தாரா காதலும் திடீரென்று முறிந்தது. 

இந்த நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை நிகிஷா படேல் 45 வயதாகும் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார். 
Tags:    

Similar News