சினிமா செய்திகள்

சிபி நடித்த `Ten Hours' படத்தின் 2 ஸ்னீக் பீக் நாளை வெளியீடு

Published On 2025-04-15 18:00 IST   |   Update On 2025-04-15 18:00:00 IST
  • சிபி சத்யராஜ் தற்பொழுது டென் ஹவர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
  • இப்படத்தை அறிமுக இயக்குநரான இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார்.

சிபி சத்யராஜ் தற்பொழுது டென் ஹவர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநரான இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது. இப்படம் ஒரு பஸ்ஸில் நடந்த கொலை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. ஓர் இரவில் அதை கண்டுபிடிக்கும் கதாநாயகன்.

திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் முதல் ஸ்னீக் பீக் காட்சி அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில்

படத்தின் இரண்டாம் ஸ்னீக் பீக் காட்சியை இயக்குநர் மாரி செல்வராஜ் நாளை வெளியிடுகிறார்.

படத்தின் இசையை கே எஸ் சுந்தரமூர்த்தி மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவு -ஜெய் கார்த்திக் செய்துள்ளார். டுவின் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News