சினிமா செய்திகள்
null

10 Years of "தனி ஒருவன்"- நினைவுகளை பகிர்ந்த படக்குழு..!

Published On 2025-08-28 22:01 IST   |   Update On 2025-08-29 10:42:00 IST
  • தனி ஒருவன் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
  • இசையமைப்பாளரும், நடிகருமான ஆதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

மோகன்ராஜா இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் 'தனி ஒருவன்'. இப்படத்தில் அரவிந்த் சாமி, நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. இப்படமே படச்சுருள் வைத்து எடுக்கப்பட்ட கடைசி திரைப்படமாகும். இதற்கு பிறகு அனைத்தும் டிஜிட்டல் ஆனது. இப்படத்தின் பலமே படத்தின் திரைக்கதையும் காட்சியமைப்பும் தான்.  இப்படத்திற்கு பின் பல துணை இயக்குநர்கள் மற்றும்  ஜீவா,ரவி சக்கரவர்த்தி போன்ற பல இணை இயக்குநர்கள், எழுத்தாளர்களின்  உழைப்பு மற்றும் பங்களிப்பு அதிகம் இருக்கிறது. 

தனி ஒருவன் திரைப்படம் நடிகர் ரவி மோகன் நடித்து 50 கோடி ரூபாய் வசூலித்த முதல் திரைப்படமாகும். 

இந்தநிலையில், 2015-ம் ஆண்டு தனி ஒருவன் இயக்குநர் ராஜாவுடன் ஹிப்-ஹாப் குழு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இசையமைப்பாளரும், நடிகருமான ஆதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அதில், "பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளின் அதிகாலையில் எடுக்கப்பட்ட புகைப்படம்"என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நடிகர் ரவி மோகன், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்டோர் தங்களது பதிவுகளை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.

Full View
Tags:    

Similar News