இது புதுசு

1000கிமீ ரேன்ஜ் வழங்கும் புதிய வகை பேட்டரிகள் - டொயோட்டாவின் மாஸ் அறிவிப்பு!

Published On 2023-06-28 07:50 GMT   |   Update On 2023-06-28 07:50 GMT
  • புதிய தலைமுறை பேட்டரி பேக் முழு சார்ஜ் செய்தால் 1000 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும்.
  • டொயோட்டா நிறுவனம் குறைந்த விலையில் லித்தியம் அயன் பாஸ்ஃபேட் பேட்டரியை அறிமும் செய்ய இருக்கிறது.

டொயோட்டா நிறுவனம் பேட்டரி தொழில்நுட்பங்கள் சார்ந்த திட்டங்கள் பற்றி அறிவித்து இருக்கிறது. அதன்படி டொயோட்டா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. புதிய தலைமுறை எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இவை 2026 ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளன.

எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்கும் அதே வேளையில், டொயோட்டா நிறுவனம் தனது லித்தியம் நிக்கல் கோபால்ட் மங்கனீசு (NCM) பேட்டரியை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. புதிய தலைமுறை பேட்டரி பேக்குகள் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 1000 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

 

அதிக ரேன்ஜ் மட்டுமின்றி இவை தற்போதைய பேட்டரிகளை விட கட்டணத்தை 20 சதவீதம் வரை குறைக்கிறது. புதிய தலைமுறை பேட்டரி பேக் அதிக திறன் வெளிப்படுத்துவதோடு, bZ4X மாடலில் உள்ளதை விட மேம்பட்ட ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்குகிறது.

புதிய தலைமுறை NCM பேட்டரிகள் தவிர, டொயோட்டா நிறுவனம் குறைந்த விலையில் லித்தியம் அயன் பாஸ்ஃபேட் பேட்டரியை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. புதிய தலைமுறை பேட்டரி பைபோலார் பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அதிக ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

இவை எதிர்கால எலெக்ட்ரிக் வாகனங்கள் ரேன்ஜ்-ஐ 20 சதவீதம் அதிகப்படுத்துவதோடு, தற்போதைய எலெக்ட்ரிக் வாகனங்களை விட 40 சதவீதம் குறைந்த விலையில் கிடைக்கும் என்று டொயோட்டா நிறுவனம் கருதுகிறது. 

Tags:    

Similar News