பைக்

டெஸ்டிங்கில் சிக்கிய டார்க் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்..

Published On 2023-12-26 09:49 GMT   |   Update On 2023-12-26 09:49 GMT
  • மோட்டார்சைக்கிள்களை விட ஸ்கூட்டர் மாடல்கள் அதிக பிரபலம்.
  • வழக்கமான ஸ்கூட்டர்களை போன்ற தோற்றம் கொண்டிருக்கும்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலமடைந்து வருகின்றன. முன்னணி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச பிரான்டுகள் வரை தொடர்ச்சியாக எலெக்ட்ரிக் வாகனங்களை இந்திய சந்தையில் களமிறக்கி வருகின்றன. இதில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் இருசக்கர வாகனங்களில் மோட்டார்சைக்கிள்களை விட ஸ்கூட்டர் மாடல்கள் அதிக பிரபலம் அடைந்து வருகின்றன.

அந்த வகையில், எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவில் முன்னணியில் உள்ள டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்-ஐ உருவாக்கி வருவது அம்பலமாகி இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் குறைந்த விலையில் கிடைக்கும் என்றும் வழக்கமான ஸ்கூட்டர் மாடல்களை போன்ற தோற்றம் கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

 

இந்த ஸ்கூட்டரில் அகலமான டெயில் லைட், ஸ்விங்-ஆர்ம்-இல் மவுண்ட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார், இடதுபுறம் ஷாக் அப்சார்பர் வழங்கப்படுகிறது. ஸ்கூட்டர் மட்டுமின்றி டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் புதிய எலெக்டிரிக் மோட்டார்சைக்கிளையும் டெஸ்டிங் செய்து வருகிறது.

ஏற்கனவே சிம்பில் எனர்ஜி, டி.வி.எஸ்., பஜாஜ், ஒலா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெஸ்டிங் செய்து வருகின்றன. இவைதவிர ஹோண்டா நிறுவனமும் இந்த பிரிவில் களமிறங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், டார்க் மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது.

Tags:    

Similar News