ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

வார ராசிப்பலன்

Published On 2022-05-20 15:14 IST   |   Update On 2022-05-20 15:15:00 IST

ராசி அதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்றதால் சம்பாத்தியம் பற்றிய சிந்தனை இல்லாதவர்களுக்கு கூட தொழில், நல்ல வேலை வாய்ப்புகள் தேடிவரும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். 4-ம் அதிபதி சூரியன் தன ஸ்தான அதிபதி புதனுடன் ராசியில் சேர்க்கை பெற்றதால் சொத்துக்கள் மூலம் வருமானம் வந்து கொண்டே இருக்கும். வருமான பற்றாக்குறை அகலும். விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு கணிசமான ஆதாயம் கிடைக்கும். பூமி, வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடும்.

வாழ்க்கைத்துணை மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். மூத்த சகோதர, சகோதரி மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். 18.5.2022 காலை 8.09 முதல் 20.5.2022 காலை 8.45 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால்உ றவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். தினமும் அபிராமி அந்தாதி கேட்கவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News