மகரம் - விசுவாவசு வருட பலன்

சோபகிருது வருட பலன் 2023

Published On 2023-04-08 13:53 IST   |   Update On 2023-04-08 13:54:00 IST

உதவிகள்தேடி வரும்!

தொழில் தந்திரம் நிறைந்த மகர ராசியினருக்கு இந்த சோப கிருது வருட தமிழ் புத்தாண்டு எதிர்பார்ப்புகளை ஈடேற்றும் சுப வருடமாக அமைய நல் வாழ்த்துக்கள். திருக்கணித பஞ்சாங்கப்படி ஆண்டின் துவக்கத்தில் ஏப்ரல் 22 முதல் குருபகவான் 4ம்மிடமான சுகஸ்தானம் செல்கிறார். ஜனவரி 17லிருந்து சனி பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது ஏழரைச் சனியின் மூன்றாம் பாகம்.

தற்போது 4,10மிடத்தில் சஞ்சரிக்கும் ராகு கேதுக்கள் அக்டோபர் 30 முதல் 3,9ம்மிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார்கள். சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். சுற்றத்தார் மதிக்கும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். கஷ்டங்கள் விலகும். கவலைகள் மறக்கும். உடன் பிறந்தவர்கள், உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உள்ளம் மகிழும் சம்பவங்கள் நிறைந்த வருடமாக இருக்கும். எந்த விசயத்தையும் உங்கள் வாதத் திறமையால் வெற்றி காண்பீர்கள்.இடமாற்றம், வீடு மாற்றம், வேலை மாற்றம் நடக்கும்.மந்தமாக இருந்த தொழில் சூடு பிடிக்கும். இரவு பகல் பாராது அதிக நேரம் உழைக்க நேரும். இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும்.வங்கி கடன் மூலம் புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற அமைப்பு உருவாகும். வாடகைக்கு போகாமலிருந்த சொத்துக்கள் வாடகைக்குப் போகும். என்றோ வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு உயரும். தாய் வழிச் சொத்தில் இருந்த வில்லங்கம் சீராகும்.

விவசாயிகளுக்கு அரசின் ஆதரவு கிடைக்கும்.ஆரோக்கிய குறைபாடு சீராகும்.நீண்ட வருடங்களாக தடைபட்ட திருமண முயற்சியில் சாதகமான திருப்பம் ஏற்படும். சிலருக்கு புதிதாக எதிர்பாலின நட்பு கிடைக்கும்.

குடும்பம், பொருளாதாரம் : குடும்பத்தில் ஒற்றுமை நிம்மதி ஏற்படும். புது வேலையில் நிறைவான ஊதியமும் மனத் திருப்தியும் ஏற்படும்.

பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றம் நிலவும். சுய சம்பாத்தியம் பெருகும். காதல் திருமணத்திற்கு வாய்ப்பு உள்ளது.பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். மதிப்பும், மரியாதையும் காப்பாற்றப்படும். கடந்த காலத்தில் நடந்த கருத்து வேறுபாடு மற்றும்மன வேதனையால் முதியோர் இல்லம் சென்ற சில வயது முதிர்ந்தவர்கள் வீடு திரும்புவார்கள். சிலருக்கு கூட்டுக் குடும்பத்தில் அல்லது கூட்டுத் தொழிலில் பிரிவினை ஏற்படலாம். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை பார்த்த சிலர் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் விருப்பத்திற்காக வேலையை விட்டு தாயகம் திரும்புவார்கள். சுபவிரயம், சுப மங்கலச் செலவு உண்டாகும்.

பெண்கள் : புதிய தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுவீர்கள். வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் உங்கள் திறமைகள் மிளிரும். குழந்தைகள் மற்றும் கணவரின் உண்மையான அன்பை உணருவீர்கள். தாய் வீட்டுச் சீதனத்தால் பெண்களுக்கு உற்சாகமும், தெம்பும் ஏற்படும். தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மனசாட்சிக்கு விரோதமான செயலில் ஈடுபடு வதை தவிர்க்கவும்.

உத்திராடம் 2,3,4 : அனைத்து விதமான சங்க டங்களும் விலகும் காலம்.புதிய முயற்சியில் வெற்றியும், லாபத்தையும் பெற முடியும்.அரசு வகை ஆதாயம் உண்டு. சொத்து வாங்கும், விற்கும் முயற்சி ஈடேறும். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும்.அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு பிரச்சனை முடிவுக்கு வரும். படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர உத்தரவு வரும்.

நல்ல திறமையும் தகுதியும் வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள்.மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். வாட்டி வதைத்த கடன் பிரச்சனை ஓரளவு குறையும்.புதிய கடன் வாங்கி பழைய கடன் அடைப்பீர்கள். கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் திணறியவர்களுக்கு இடைக்கால நிவாரணம் கிடைக்கும். எதிரிகள் தொல்லை குறையும். தினமும் அனுமன் மூல மந்திரம் படிக்கவும்.

திருவோணம் : எண்ணங்களும் லட்சியங்களும் ஈடேறும்.வேதனைகளை விரட்டி சாதனைகளாக மாற்றும் சிந்தனைகள் உதயமாகும். சிலருக்கு உத்தியோகம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க நேரும். புதிய கூட்டுத் தொழில் முயற்சியை தவிர்க்கவும். அரசியல் தொடர்புடையவர்களுக்கு பொது இடத்தில் புகழ் கிடைக்கும்.வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் மற்றவர்கள் பெயரில் சொத்து வாங்குவதை தவிர்க்கவும். சுப செய்தி., சுப வாய்ப்புகள் தேடி வரும்.எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். தேவையற்ற கற்பனை, பயங்கள் உருவாகி மறையும். தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியில் ஆர்வம் பிறக்கும். நீண்ட நாட்களாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்புவார்கள். தினமும் ஸ்ரீ ராம நாமப் பாராயணம் செய்யவும்.

அவிட்டம்1 ,2 : எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை யும், தைரியமும் மேலோங்கும் காலம்.குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும்.தேடிச் செல்லும் அன்பு நிலையற்றது, தேடி வரும் அன்பே நிலையானது என்பதை உணர்வீர்கள். புதிய நட்பு வட்டாரம் உரு வாகும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.வியாபாரம் பெருகும்.புதிய தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. ஒரு சிலருக்கு பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளை சந்திக்க நேரும். வெளிநாட்டு வேலை மற்றும் பயணம் திட்டமிட்டபடி நடக்கும். சிலருக்கு செயற்கை முறை கருத்தரிப்பு வெற்றி தரும். வெளியூர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கண்கள் தொடர்பான பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை செய்ய நேரும். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். தினமும் அனுமன் சாலீசா படிக்கவும்.

பரிகாரம் : மகர ராசியினர் தமிழ் புத்தாண்டிற்கு நாமக்கல் மாவட்டம் நாமக்கல்லில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் சென்று நரசிம்மரையும், தாயாரையும், ஆஞ்சநேயரையும் வழிபட்டு வர ஏழரைச் சனியின் கெடுபலன்கள் குறையத்துவங்கும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News