இந்த வாரம் எப்படி 16-5-2022 முதல் 22-5-2022 வரை
ராசிக்கு 8-ல் சனி, செவ்வாய் சேர்க்கை இருப்பதால் பூர்வீக சொத்து மீதான வழக்குகள் சமாதானமாக பேசி முடிக்கப்படும். பாகப்பிரிவினைகள் சுமூகமாகும். விபரீத ராஜ யோகத்தால் சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். குருபகவான் தனது சொந்த வீட்டில் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பேரன் பிறப்பான். புதிய தொழில் ஒப்பந்தங்கள் தேடி வரும். பணி புரிபவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும்.
பெண்களின் நம்பிக்கைகள் எதிர்பார்ப்புகள், ஆசைகள் நிறைவேறும். பாதியில் நிற்கும் கட்டிட பணிகள் துரிதமாகும். 22.5.2022 அன்று காலை 11.12-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் வியாபாரத்தில் சில சங்கடங்களை சமாளிக்க வேண்டி வரும். தினமும் காயத்திரி மந்திரம் கேட்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406