வீட்டில் இருந்தப்படியே பைரவரை வழிபடலாம்
- செந்நிற மலர்கள் சாத்தி வழிபடலாம்.
- ஆலயங்களில், பைரவருக்கு வடைமாலை சாத்தியும் வேண்டிக்கொள்வார்கள்.
தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவ வழிபாடு செய்யலாம்.
செந்நிற மலர்கள் சாத்தி வழிபடலாம். ஆலயங்களில், பைரவருக்கு வடைமாலை சாத்தியும் வேண்டிக்கொள்வார்கள்.
மிளகால் செய்யப்பட்ட உணவை நைவேத்தியமாகப் படைப்பார்கள்.
வீட்டில் இருந்தே பைரவரை வழிபடலாம். பைரவாஷ்டகம் சொல்லி, பைரவ போற்றி சொல்லியும் பைரவரை ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்து பூஜிக்கலாம்.
அஷ்டமி நாளில், ராகுகால வேளையில், வீட்டு பூஜையறையில், விளக்கேற்றி, பைரவ அஷ்டகம் சொல்லி பாராயணம் செய்வது, இதுவரை இருந்த காரியத் தடைகள் அனைத்தும் நீக்கிவிடும்.
தடையின்றி காரியங்கள் நிகழும்.
வீட்டின் தரித்திரத்தைப் போக்கி அருளுவார் பைரவர்.
அஷ்டமி நாளில், பைரவரை நினைத்துக்கொண்டு, தெருநாய்களுக்கு உணவளிப்பதும் தோஷங்களில் இருந்தும் சாபங்களில் இருந்தும் விலக்கு அளிக்கும். விமோசனம் பிறக்கும் என்பது ஐதீகம்.
செவ்வாய்க்கிழமை ராகுகாலவேளையில் (மாலை 3 முதல் 4.30 மணிக்குள்) விளக்கேற்றுங்கள்.
பயமில்லாத வாழ்க்கையைத் தந்தருள்வார் பைரவர்.
எதிர்ப்புகளைத் தவிடுபொடியாக்கி, காரியத்தில் வெற்றியைத் தந்தருள்வார்.