ஆன்மிக களஞ்சியம்

வடபழனி ஆலயம் உருவான கதை-அண்ணாசாமி நாயக்கர் அறிமுகம்

Published On 2024-04-17 11:16 GMT   |   Update On 2024-04-17 11:16 GMT
  • ஆனால் அவருக்கு படிப்பில் கருத்து செலுத்த முடியவில்லை. நாளடைவில் பள்ளிக்கு செல்வதையும் நிறுத்திக் கொண்டார்.
  • அவருக்கு இறை அன்பு மட்டும் மிகையாக வளர்ந்து வந்தது.

''தவநிலையோர் தெய்வம்'' என விளங்கும் பழனி ஆண்டவர், சென்னையில் ஒரு பகுதியாகிய கோடம்பாக்கத்தில் எழுந்தருளவும்,

வடபழனிக் கோவில் மாண்புற ஏற்படவும், காரணங்களாக விளங்கிய தவப்பெருஞ் சான்றோர்கள் முறையே

ஸ்ரீ அண்ணாசாமி நாயக்கர், ஸ்ரீ ரத்தினசாமிச் செட்டியார், பாக்கிய லிங்கத் தம்பிரான் என்பவர்கள் ஆவர்.

ஸ்ரீ அண்ணாசாமி நாயக்கர்

இப்போது வடபழனி ஆண்டவர் கோவில் உள்ள இடத்தில் இன்றைக்குச் சற்று ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்

சாலி கிராமம் என்னும் பகுதியில், அண்ணாசாமி நாயக்கர் என்பவருடைய வீடு இருந்தது.

அவருடைய தாயார், தகப்பனார் பெயர்கள் தெரியவில்லை.

இளமையிலேயே அவர் அருள் நாட்டமும் இனிய குணங்களும், எவரிடமும் பணிவுடன் இன்சொல் பேசும் இயல்பும் உடையவராக இருந்தார்.

பெற்றோர்கள் அவரை வியாக்கிரபுரீஸ்வரர் கோவிலின் அருகில் குடியிருந்த சாம்பசிவம் பிள்ளை என்னும் தமிழ் அறிஞர் ஒருவரிடம் அனுப்பிக் கல்வி கற்க ஏற்பாடு செய்தனர்.

ஆனால் அவருக்கு படிப்பில் கருத்து செலுத்த முடியவில்லை. நாளடைவில் பள்ளிக்கு செல்வதையும் நிறுத்திக் கொண்டார்.

அவருக்கு இறை அன்பு மட்டும் மிகையாக வளர்ந்து வந்தது.

Tags:    

Similar News