ஆன்மிக களஞ்சியம்

துளசியின் மகிமையும், மகத்துவமும்

Published On 2024-02-02 11:41 GMT   |   Update On 2024-02-02 11:41 GMT
  • அக்னியில் துளசி இலையினால் ஹோமம் செய்கிறவர்களுக்கு அந்த யாகத்தினுடைய முழுமையான பலன் கிடைக்கும்.
  • ஆன்மீக வழிபாட்டிற்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது.

காடுமேடுகளில் எல்லாம் வளரும் தன்மை கொண்டது துளசி.

இது ஒரு நல்ல கிருமி நாசினியாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல், ஆன்மீக வழிபாட்டிற்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது.

துளசி தேவியை தினமும் யார் பூஜை செய்கிறார்களோ அவர்கள் இந்த உலகில் விரும்பிய சுகங்களை அனுபவித்து முடிவில் மோட்சத்தை அடைகிறார்கள்.

எந்த இடத்தில் துளசி செடி பிடி அளவேனும் இருக்கிறதோ அந்த இடத்தில் நாராயணன் போன்ற தேவர்கள் நித்யாவாசம் செய்கிறார்கள்.

யாருடைய உடலானது துளசியினால் கொளுத்தப்படுகின்றதோ அவருடைய உடலானது சகல பாவங்களையும் நீக்கி கொள்கிறது.

துளசி மாலையை அணிந்து கொண்டு யார் பிராணனை விடுகின்றாரோ அவருடைய உடல் தொடர்பான பல பாவங்களும் போய் விடுகின்றன.

அக்னியில் துளசி இலையினால் ஹோமம் செய்கிறவர்களுக்கு அந்த யாகத்தினுடைய முழுமையான பலன் கிடைக்கும்.

Tags:    

Similar News