என்னை மனதில் வைத்து
என்றும் தொழுதெழுவாரென்
கண்ணின் கருணையினால்
கவலையின்றி வாழ்ந்திடுவார்!
மின்னல் இடி மலைகள்
மேல் வருநற் தீவினைகள்
மெல்ல விலகி நின்று
மேன்மை கனியச் செய்வேன்!
எண்ணும் பிணி நீக்கி
என்றென்றும் காத்திடுவேன்
எண்ணரிய ஐஸ்வர்யம்
இவர்க்காக நான் கொடுப்பேன்!
மண்ணில் கிடைக்காத
மகத்துவமும் தான் கிடைக்க
மானாத வாழ்வழிப்பேன்
மகிழ்வில் வைப்பேன்!
தாரித்ர்யம் நீக்கித்
தக்க வரம் தந்திடுவேன்
தன்னேரில்லாத மணம்தான்
நடத்தி வைத்திடுவேன்!
கன்னியர் பூஜை செய்யக்
கஷ்டம் தவிர்ப்பேனே
எண்ணுகிற மணவாளர்
இவர்க்கு கிடைப்பாரே!
கண்ணியமே மிக்குடைய
கிரகஸ்தர் எனைத் தொழுதால்
காட்சிக்கு எளிமை எனக்
கனிந்து நான் காத்திடுவேன்!
மும்மூர்த்தி போற்றி நிற்க
மோட்சப் பதம் தருவேன்
முழுதாக காத்து நிற்கும்
முதல்வியும் நானாவேன்!
மோட்சப் பதம் தருவேன்
முக்தியும் நான் தந்திருப்பேன்
மோக மழை ஆன என்னை
முழுதாய் உணர்ந்திருக்க
கோடி காராம் பசுவை
கொண்டு வந்து கன்றுடனே
கொம்புக்கு பொன்ன மைத்துக்
குளம்புக்கு வெள்ளி கட்டி
கங்கைக் கரையினிலே
கரதுகிரண காலத்திலே
கருதியே வாலுருவி
அந்தணர்க்கு மகாதானம்
செங்கையில் செய்த பலன்
கீர்த்தியெல்லாம் நான் தருவேன்!
அங்கே சிவப்பான
அரியவன் தான் ஆணையிது
மங்கைத் துளசியெனை
மகிழ்ந்தே தொழுதேத்த
மாதவத்தோர் வாழ்ந்திருப்பார்
மாறாத தன்னருளால்
எங்கள் திருக்கோலம் இல்லின்
மணக்கோலம்
கங்கைக்கரை கோலம் காரளந்தான்
பொற்கோலம்
மங்காப் பழமையெங்கள்
மகிமை உரைத்துவிட்டேன்!
இப்பாரில் எப்போதும்
இருந்து தவம் செய்யும்
மங்கை துளசியின்று மனம்
வைத்துத் திருவிளக்கில்
வந்து படிந்து விட்டேன்
வாடாமலர் சூட்டேன்.