ஆன்மிக களஞ்சியம்

தொட்டாச்சார்யர் சேவை

Published On 2024-01-07 17:35 IST   |   Update On 2024-01-07 17:35:00 IST
  • அங்கேயே அவருக்கு கருட சேவையைக் காட்டி அருளினாராம் ஸ்ரீவரதராஜர்.
  • இதன் நினைவாகவே இன்றும் பகவானை குடையால் மறைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

வைகாசி பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாள்-சூரிய உதயத்தில் கோபுர வாயிலில் கருட வாகனத்தில், குடையின் கீழ் கம்பீரமாக சேவை சாதிக்கிறார் ஸ்ரீகாஞ்சி வரதர்.

அப்போது சில நிமிட நேரம் குடைகளால் ஸ்ரீவரதரை மறைத்து விடுவர்.

இதுவே தொட்டாச்சார்யர் சேவை எனப்படும்.

சோளிங்கபுரத்தில் வாழ்ந்தவர் தொட்டாச்சார்யர்.

இவர், ஆண்டுதோறும் வைகாசி உற்சவத்தின்போது கருட சேவையைக் காண காஞ்சிக்கு வருவது வழக்கம்.

ஒருமுறை அவரால் காஞ்சிக்கு வர இயலவில்லை.

சோளிங்கபுரத்தில் பிரம்ம தீர்த்தக் கரையில் நின்றவாறே வரதனின் கருட சேவையை நினைத்து நெக்குருகினார்.

அங்கேயே அவருக்கு கருட சேவையைக் காட்டி அருளினாராம் ஸ்ரீவரதராஜர்.

இதன் நினைவாகவே இன்றும் பகவானை குடையால் மறைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

அதாவது பெருமாள் இங்கு மறைந்து அங்கு தோன்றுவதாக ஐதீகம்.

Tags:    

Similar News