ஆன்மிக களஞ்சியம்

திருவெண்காடு தலத்துக்கு செல்வது எப்படி?

Published On 2023-12-09 17:25 IST   |   Update On 2023-12-09 17:25:00 IST
  • திருவெண்காடு ஆலயம் சீர்காழிக்கு மிக அருகில் உள்ளது.
  • வைத்தீஸ்வரன் கோவிலில் கூடுதல் வசதிகளுடன் தங்குவதற்கு உயர்ரக தங்கும் விடுதி இருக்கிறது.

திருவெண்காடு ஆலயம் சீர்காழிக்கு மிக அருகில் உள்ளது.

வெளியூர்களில் திருவெண்காடுக்கு செல்ல விரும்புபவர்கள் சீர்காழியை சென்றடைய

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பஸ், ரெயில் வசதிகள் உள்ளன.

சீர்காழியில் பக்தர்கள் தங்கி செல்வதற்கு உரிய லாட்ஜ் வசதிகள் உள்ளன.

அங்கு தங்குவதற்கு விருப்பம் இல்லாதவர்கள் அருகில் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு செல்லலாம்.

வைத்தீஸ்வரன் கோவிலில் கூடுதல் வசதிகளுடன் தங்குவதற்கு உயர்ரக தங்கும் விடுதி இருக்கிறது.

அங்கு அறைகள் கிடைக்காதபட்சத்தில் மயிலாடுதுறைக்கு செல்லலாம்.

மயிலாடுதுறையில் நிறைய லாட்ஜ் வசதிகள் இருக்கின்றன.

உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப அங்கு தங்கும் விடுதிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

மயிலாடுதுறையில் தங்குவதில் மற்றொரு பலனும் இருக்கிறது.

அங்கிருந்து திருவெண்காடு தலத்துக்கு மட்டுமல்ல மற்ற பாடல் பெற்ற தலங்களுக்கும் மிக எளிதாக சென்று வரலாம்.

சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் நகர்ப்பேருந்து எண்கள் 5, 5பி, 5சி.

சீர்காழியிலிருந்து பொறையாறு செல்லும் ஒரு பேருந்தும் இவ்வூர் வழியாகச் செல்கிறது.

மயிலாடுதுறையிலிருந்து நாங்கூர் செல்லும் பேருந்து எண். 28, மங்கைமடம் செல்லும் பேருந்து எண்.12, பெருந்தோட்டம் செல்லும் பேருந்து எண்.34 (ஆனந்த்) ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளும் திருவெண்காட்டின் வழியாகச் செல்கின்றன.

நாகையிலிருந்து வருவோர் கருவி முக்கூட்டில் இறங்கி திருவெண்காட்டிற்கு வரும் பேருந்தில் வரவேண்டும்.

பூம்புகார் மேலையூரில் இறங்குவோர் திருவெண்காடு வழியாகச் செல்லும் பேருந்துகளில் வரலாம்.

சென்னையில் இருந்து செல்ல விரும்புபவர்கள் சீர்காழி சென்றடைய ஏராளமான அரசுப் பேருந்துகள் உள்ளது.

சீர்காழியில் இறங்கி அங்கிருந்து வாடகை கார் பிடித்து சென்று வரலாம்.

சென்னையில் இருந்து காரில் செல்லும் வசதி உடையவர்கள் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் கடந்து சீர்காழியை அடையலாம்.

காரில் செல்பவர்கள் சீர்காழி நகருக்குள் செல்வதை தவிர்ப்பது நல்லது.

நாகை காரைக்கால் பைபாஸ் சாலையில் சென்று திருவெண்காடுக்கு எளிதில் செல்லலாம்.

பஸ்சில் செல்பவர்கள் திட்டமிட்டு பயணத்தை அமைத்து கொள்ள வேண்டும்.

சென்னையில் இருந்து அதிகாலையிலேயே புறப்பட்டு விட்டால் 11 மணிக்கெல்லாம் சென்று சேர்ந்து விடலாம்.

மதியம் 1 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

அதற்குள் வழிபாடுகளை முடித்து விட்டு, மதியம் ஆலயத்தில் சற்று ஓய்வு எடுத்து விட்டு பிற்பகலில் புறப்பட்டால் இரவில் சென்னை வந்து சேர்ந்து விடலாம்.

ஆனால் பயணத்துக்கான திட்டமிடல் சரியாக இருத்தல் வேண்டும்.

Tags:    

Similar News