ஆன்மிக களஞ்சியம்

திருவெண்காடு தல வரலாறு

Published On 2023-12-09 17:21 IST   |   Update On 2023-12-09 17:21:00 IST
  • திருவெண்காடு, காவிரி வடகரைத் தலங்களில் பதினொன்றாவதாக உள்ளது.
  • இதற்கு ஆதி சிதம்பரம் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.

திருவெண்காடு, காவிரி வடகரைத் தலங்களில் பதினொன்றாவதாக உள்ளது.

இதற்கு ஆதி சிதம்பரம் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.

இறைவன் திருவெண்காட்டீசர் சுவேதாரண்யேசர். இறைவி வேயன்ன தோளி நாச்சியார் பிரம வித்யா நாயகி.

இறைவன் மூன்று திருநாமங்களில் இங்கே அருள் வழங்குகிறார்.

சுவேதாரண்யேசர், நடராஜர், அகோரமூர்த்தி.

இத்தலத்தில் தீர்த்தங்கள் மூன்று சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம்.

இத்தீர்த்தங்களில் நீராடி வழிபட்டால் பிள்ளைப் பேற்றை அடையலாம். தீவினைகள் தீர்ந்து விடும்.

பிர்ம வித்யாம்பிகை, மேற்கு நோக்கிய துர்க்கை, சுவேத மாகாளி ஆகிய மூன்று சக்திகள் கொண்டது இத்தலம்.

இத்தலத்தின் தல விருட்சங்கள் மூன்று வில்வமரம், வடவால மரம், கொன்றை மரம்.

சிதம்பரத்தில் இருப்பதைப் போலவே இங்கே நடராஜர் பெருமையுடன் விளங்குகிறார்.

அங்கே நடைபெறுவது போலவே இப்பெருமானுக்கும் ஆறு அபிஷேகங்களும், ஆனித் திருமஞ்சனம்,

மார்கழித் திருவிழா முதலியவையும் நடைபெறுகின்றன.

இத்தலத்தின் விநாயகர் பெரிய பிள்ளையார்.

Tags:    

Similar News