ஆன்மிக களஞ்சியம்

திருவெண்காடு தல இருப்பிடம்

Published On 2023-12-09 17:23 IST   |   Update On 2023-12-09 17:23:00 IST
  • இதில் திருவெண்காடு தலம் காவிரி வடகரைத் தலங்களுள் பதினொன்றாவது ஆகும்.
  • இத்திருத்தலம் நாகை மாவட்டத்தில், சீர்காழி வட்டத்தில் இருக்கிறது.

உலகத்திலுள்ள உயிர்கள் தம்மை வழிபட்டு உய்யும் பொருட்டு இறைவன் திருமேனி தாங்கித் திருக்கோவில் கொண்டு

எழுந்தருளி இருக்கும் திருத்தலங்கள் பல உள்ளன.

அவற்றுள் திருப்பதிகம் பெற்றவை மிகச் சிறந்தவை.

அவைகளைப் பாடல் பெற்ற பதிகள் என சொல்வார்கள்.

சோழ நாடு, ஈழ நாடு, பாண்டிய நாடு, மலை நாடு, கொங்கு நாடு, நடு நாடு, தொண்டை நாடு,

துளுவ நாடு, வடநாடு என நாட்டு வகையாக அத்தலங்களை நம் முன்னோர்கள் பிரித்திருக்கின்றனர்.

அதிலும் சோழ நாட்டை இரு பகுதிகளாக வகுத்துள்ளனர்.

அவை காவிரியாற்றுக்கு வடகரையில் 63, தென்கரையில் 127 திகழும் தலங்களாகும்.

இதில் திருவெண்காடு தலம் காவிரி வடகரைத் தலங்களுள் பதினொன்றாவது ஆகும்.

இத்திருத்தலம் நாகை மாவட்டத்தில், சீர்காழி வட்டத்தில் இருக்கிறது.

மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.

திருவெண்காட்டிற்கு தெற்கே மூன்று கி.மீ. தொலைவில் காவிரியாறும், வடக்கே ஒரு கி.மீ. தூரத்தில் மணிகர்ணிகை என்னும் மண்ணியாறும் ஓடுகின்றன.

திருச்சாய்காடு (சாயாவனம்), காவிரி பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரம், திருவலம்புரம், கீழைத் திருக்காட்டுப்பள்ளி, திருக்கலிக்காமூர் முதலிய தலங்கள் திருவெண்காட்டை சூழ்ந்துள்ளன.

திருநாங்கூர், திருவாலி, திருநகரி என்ற வைணவப் பதிகளும் இதன் அருகே இருக்கின்றன.

Tags:    

Similar News