ஆன்மிக களஞ்சியம்

திருத்தணிக்கு சென்று புதுமையான காணிக்கை அளிக்க நினைத்த அண்ணாசாமி

Published On 2024-04-17 11:24 GMT   |   Update On 2024-04-17 11:24 GMT
  • திருக்கோவில் அமைதியுற்றது. நாயக்கர் உணர்வு எய்திக் கண்விழித்துப் பலி பீடத்தைக் கண்டார்.
  • அருகில் இருந்த காணிக்கை உண்டியலையும் கண்களால் நோக்கினார்.

அப்போது அவருக்குப் பழனியில் இருந்து வந்த சாது முன்னர் தெரிவித்தபடி, திருத்தணிகைக்குச் செல்ல வேண்டும் என்கிற விருப்பமும், அங்குச் சென்று ஏதேனும் காணிக்கை செலுத்தினால் தான் தம் நோய் தீரப்பெறும் என்ற கருத்தும், பெரிதாக நிகழ்ந்து வந்தன.

முருகனை வழிபடுகிற போது அவரை நாவாரப் பாடி மகிழ வேண்டும் என்கிற விருப்பமும் அண்ணாசாமி நாயகருக்கு உண்டாயிற்று.

இளமையில் கல்வியறிவு பெறாமல் போனதை எண்ணி எண்ணி வருந்தினார்.

திருப்போருரில் அடியார்கள் திருப்புகழ் பாடி முருகனை வழிபட்ட காட்சிகளையும், அங்கங்கே அன்பர்கள் கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் கலிவெண்பா, வேல் வகுப்பு, மயில் விருத்தம், திருப்போரூர்ச் சன்னிதிமுறை முதலியவற்றைப் பாராயணம் செய்து கொண்டு அமர்ந்திருந்த அழகையும், நினைந்து நினைந்து ஏங்கினார்.

அடுத்த கார்த்திகையன்று நாயக்கர் திருத்தணிகைக்குச் சென்றார் அடியார்களின் பாராயணங்களையும் பாடல்களையும் கேட்டுக் கொண்டே தம்மைமறந்த நிலையில் அவர்களுடன் திருமலை திருக்கோவிலை அடைந்தார்.

கொடி மரத்தின் எதிரில் நின்று மேலும் மேலும் வரிசையாகத் திரண்டு வரும் அடியார்களின் ஆடல் பாடல்களைக் கண்டும் கேட்டும் விம்மிதம் எய்தினார்.

நெடுநேரம் ஆகியது. இரவு மணி ஒன்பதும் நெருங்கியது. அடியார் திரள் மெல்லமெல்லக் குறைந்தது.

திருக்கோவில் அமைதியுற்றது. நாயக்கர் உணர்வு எய்திக் கண்விழித்துப் பலி பீடத்தைக் கண்டார்.

அருகில் இருந்த காணிக்கை உண்டியலையும் கண்களால் நோக்கினார்.

அவருக்கு ஏதோ ஓர் உள்ளுணர்வு தோன்றியது.

Tags:    

Similar News