ஆன்மிக களஞ்சியம்

திருமணம் கைூடும் சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆலயம்

Published On 2023-11-16 13:13 GMT   |   Update On 2023-11-16 13:13 GMT
  • தஞ்சையிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம் புன்னைநல்லூர்.
  • திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆலயம் உள்ளது.

தஞ்சையிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம் புன்னைநல்லூர்.

இத்தலத்தில் மூன்றாம் பிராகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் காணப்படும் பாம்புப் புற்றுக்கு பக்தர்கள்

பால், முட்டை ஆகியவற்றை வைத்து வணங்குகின்றனர்.

12 அடிக்குமேல் நீளம் உள்ள பாம்பு ஒன்று 6-4-1988-ல் இங்கு சட்டை உரித்து விட்டுச் சென்றிருக்கிறது.

அதை பொதுமக்களின் பார்வைக்காக கண்ணாடிப் பெட்டியில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழி பட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

சங்கரன்கோவில்

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆலயம் உள்ளது.

நாக தோஷம் உள்ளவர்கள் இந்தக் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று வந்து பாம்பு புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபடுகின்றனர்.

இவ்வாறு 11 வாரம் தொடர்ந்து புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபட்டு வந்தால் நாக தோஷத்தால் தடைப்பட்டு வரும் திருமணம் விரைவில் நடைபெறும்.

Tags:    

Similar News