ஆன்மிக களஞ்சியம்

ஸ்ரீ லட்சுமி நாராயணர் கோவில்

Published On 2023-12-27 18:20 IST   |   Update On 2023-12-27 18:20:00 IST
  • இக்கோவில் சார்பாக பசுமாடுகள் வளர்ப்பதற்கான இடம் தனியாக ஒதுக்கி உள்ளனர்.
  • இக்கோவிலில் கருவறை தூண் வடிவில் இருப்பது ஒரு சிறப்பு.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு இத்தளத்தில் விளங்கிய ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயம் காலப்போக்கில் பூமிக்குள் புதையுண்டு இருக்கிறது.

தன் பக்தனுக்காக தூணைப் பிளந்து கொண்டு வெளியே வந்த ஸ்ரீ நரசிம்மன் பக்தனின் வேண்டுதலுக்கு ஏற்ப

சாந்த சொரூபியாய் திருமகள் மகாலட்சுமியோடு இத்தளத்தில் திருக்கோவில் கொண்டு எழுந்தருளினார்.

இத்திருக்கோவில் அமைந்துள்ள இடம் நங்கை நல்லூர் என்று அழைக்கப்பட்டது.

நங்கை என்பது ஸ்ரீ மகாலட்சுமியை குறிப்பதாகும்.

ஸ்ரீ மகாலட்சுமி வாசம் செய்யும் கோவில் என்பதால் நங்கைநல்லூர் என்று அழைக்கப்பட்டது.

தற்போது அது நங்கநல்லூர் என்று பரவி உள்ளது.

பல காலங்கள் கடந்த பின் 1974 ஆம் ஆண்டு இப்பகுதியில் பண்டைய கால பொருட்கள் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர்.

இதைப்பற்றி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடம் தகவல் அளித்தனர்.

இந்த இடத்தில் ஆய்வு செய்து அந்த பொருள்களெல்லாம் எட்டாம் நூற்றாண்டின் பொருள்கள் என்று கண்டறிந்தனர் .

பூஜைக்கு பயன்படுத்தக்கூடிய தூபக்கால், தீபத்தட்டு, மணி மற்றும் சக்கரம் உட்பட மகாவிஷ்ணுவின் விக்ரகம் , சிதைந்த கோவில்களின் கர்ப்பகிரக பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன.

இதையே அடிப்படையாகக் கொண்டு இப்பகுதியில் லட்சுமி நரசிம்மர் ஆலயம் இருந்திருக்கிறது என்று உறுதி செய்தனர்.

அன்று முதல் ஸ்ரீ கிருஷ்ண பக்தஜன சபாவினர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சிலையை ஒரு கொட்டகையில் வைத்து பூஜை செய்து வந்தனர்.

லட்சுமி நரசிம்மன் என்பது நான்காவது அவதாரம்.

இந்த அவதாரம் பிரதோஷத்தில் அவதரித்தார் என்று கூறுகின்றனர்.

பிரதோஷம் என்பது சிவன் கோவில்களில் மட்டும் தான் வழிபட்டு வருகிறது.

ஆனால் பிரதோஷத்தில் அவதரித்தார் என்பதால் இக்கோவிலில் பிரதோஷம் வழிபட்டு வருகின்றார்களாம்.

அந்த ஒரு சிறப்பு இக்கோவிலுக்கு உண்டு.

மேலும் லட்சுமி நரசிம்மருக்கு செவ்வாய்கிழமை உகந்த நாளாம்.

இக்கோவிலில் கருவறை தூண் வடிவில் இருப்பது ஒரு சிறப்பு.

காரணம் தூணைப்பிளந்து கொண்டு வந்தார் ஸ்ரீ நரசிம்மர் என்பதால் தூண் வடிவில் கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது.

இக்கோவிலில் உள்ள சீனிவாச பெருமாள் உற்சவமூர்த்தி விக்ரகம், கோவில் கொடி மரம் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மூலமாய் நன்கொடையாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

திருப்பதி தேவஸ்தான மூலமாக தமிழ்நாட்டில் எந்த ஒரு கோவிலுக்கும் இப்படி கொடுக்கப்படவில்லையாம்.

அதுவும் இக்கோவிலின் சிறப்பு.

உயர்ந்த கோபுரத்தின் உள்ளே சாந்தசொரூபியாய் அழகாக வும் நான் குதிருக்கரங்களோடு மேல் இருகைகளால் சங்குசக்கரம் தாங்கி கொண்டு, வலது கீழ்கையில் அபயமுத்திரையுடன், இடதுகையை மடி மீது வைத்துக் கொண்டு திருமகள் மகாலட்சுமியோடு காட்சியளிக்கிறார் நரசிம்மர்.

லட்சுமி நரசிம்மர் வலது புறத்தில் ஸ்ரீ கோதண்டராமன், இடதுபுறம் ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் காட்சியளிக்கிறார்கள்.

மேலும் கோவிலின் பிரகாரத்தில் ஸ்ரீ சீனிவாசபெருமாள் குடிகொண்டிருக்க சன்னதி வெளியே ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார்.

மேலும் கோவிலுக்குள் ஆழ்வார்கள் திருவுருவச்சிலைகளும் வைக்கப்பட்டுள்ளது.

அதிலும் ஆண்டாளுக்கு மட்டும் தனியாக ஒரு சந்நிதியும் உண்டு.

லட்சுமி நரசிம்மர் பிரதோஷத்தில் அவதரித்ததால் ஒரு தனி சிறப்பு உண்டு என்று கூறும் பக்தர்கள் அவரை வணங்கினால் எல்லாம் ஏற்றம் தான் என்கின்றனர்.

மேலும் பூமிக்கு அடியில் இருந்து கிடைத்த மகாவிஷ்ணுவின் பிரயோக சக்கரத்தை ஆராய்ச்சியாளர்கள் விட்டு சென்றுவிட்டனர்.

அதையும் இக்கோவிலில் வைத்து பூஜை செய்து வழிபட்டு வருகிறார்கள்.

இச்சக்கரத்தின் மீது பக்தர்கள் தங்கள் கைகளை வைத்து வணங்கினால் தடைகள் நீங்கிகாரிய சித்தி பெறும் என்கின்றனர்.

இக்கோவிலை கடந்த 44 வருடமா கநிர்வகித்து வருகிற ஸ்ரீ கிருஷ்ண பக்தஜன சபாவின் செயலாளர் ராகவாச்சாரி

கூறுகையில் 1974 ஆம் ஆண்டு ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயத்துடைய பொருட்கள் இங்கு கிடைக்கும் பொழுது இந்த

இடம் ஒரு கல்லர் குகையாக இருந்தது.

நாங்கள் ஒரு கொட்டகையில் லட்சுமி நரசிம்மரை வைத்து வணங்கினோம்.

ஆரம்பத்தில் எங்களுடைய சபா உறுப்பினர் உறுப்பினர்களிடம் மட்டும் ரூபாய் 15 பெற்றுக் கொண்டு கோவில் உடைய திருப்பணிகளை மேற்கொண்டு வந்தோம்.

பின்பு படிப்படியாக சபா உறுப்பினர்களுடைய உதவினாலும் நன்கொடையானாலும் 3.1.1998 ஆண்டு ராஜகோபுரம் அடிக்கல் நாட்டப்பட்டது.

6-9-2001 ஆண்டு ராஜ கோபுரம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் அகோபிலமடம் சுவாமிகளால் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இக்கோவிலின் திருப்பணிகள், வழிமுறைகள், ஆலோசனைகள் எல்லாம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் அகோபிலமடம் வழிகாட்டுதலின்படி தான் நடத்தப்படுகிறது.

மேலும் அவர் கூறுகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது என்றும் கூறினார்.

இக்கோவில் பற்றி கூறும்பொழுது இக்கோவிலில் உள்ள கோபுரத்தின் மேலுள்ள கலசம் ஒரு முஸ்லிம் சகோதரரால்

வழங்கப்பட்டது என்றும், கோவிலின் புனிதத்தன்மை மாறாமல் கோவிலுக்கு வரும் அனைத்து ஜாதி ,

மதத்தினருடைய திருமண நாள், பிறந்த நாள் போன்ற விசேஷங்களுக்கு அவர்களுக்கு மாலை அணிவித்து

மரியாதை செலுத்தப்படும் என்கின்றார்.

இக்கோவிலில் அர்ச்சனை டிக்கெட் கிடையாது.

மேலும் இக்கோவிலில் பிளாஸ்டிக் உபயோகப்படுத்துவது முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இக்கோவில் சார்பாக பசுமாடுகள் வளர்ப்பதற்கான இடம் தனியாக ஒதுக்கி உள்ளனர்.

இக்கோவில் சார்பாக ஊனமுற்றோர் உறுப்பினர்களுக்கு மாதம் 200 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

பண்டிகை நாட்களில் அது 500 ரூபாயாக அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.

Tags:    

Similar News