ஆன்மிக களஞ்சியம்

சிவபெருமானின் நடனத்தோற்றம்

Published On 2024-01-18 12:27 GMT   |   Update On 2024-01-18 12:27 GMT
  • சிவராத்திரி புண்ணிய தினத்தன்று நடராஜர் உருவத்தில் சிவபெருமான் நடனமாடியதாக சொல்வார்கள்.
  • இதையே நடராஜரின் மெய் மறந்து கூத்தாடும் நிலையை உணர்த்துகிறது.

சிவராத்திரி புண்ணிய தினத்தன்று நடராஜர் உருவத்தில் சிவபெருமான் நடனமாடியதாக சொல்வார்கள்.

இந்த நடனத்தோற்றம் இறைவனின் தத்துவத்தை உணர்ந்த பக்தன் உணர்ச்சியால் மெய் மறந்திருப்பதைப் பிரதிபலிக்கிறது.

விழித்திருப்பது, தூங்குவது, ஆழ்ந்த தூக்கம் ஆகியவற்றை கடந்த நிலை, மற்ற உணர்ச்சிகள் இந்த நிலையைப் பாதிக்காது.

இந்த நிலையில் நித்தியமான ஆனந்தத்தை உணருவதே உன்னதமானது. அதையே நடராஜரின் தோற்றம் பிரதிபலிக்கிறது.

உடல் உள்ளம் ஆகியவற்றைச் சார்ந்த உணர்வுகளும், மனத்தின் எண்ணங்களும், புத்தியின் இயக்கமும் கட்டுப்படும் நிலையே பேரானந்தமானது.

இதையே நடராஜரின் மெய் மறந்து கூத்தாடும் நிலையை உணர்த்துகிறது.

நடராஜர் ஒரு காலை இருத்தியும், ஒரு காலை உயர்த்தியும் ஆடுவது, உலகப்பற்றுகளை மிதித்து அடக்கியும், உன்னதமான ஆன்மீக உணர்வுகளை உயர்த்தியும் வாழ்வது பேரானந்தம் தரும் என்பதை உணர்த்துகிறது.

Tags:    

Similar News