ஆன்மிக களஞ்சியம்

ரணங்களை நீக்கும் ரணவிமோசன் தீர்த்தம்

Published On 2023-09-15 17:12 IST   |   Update On 2023-09-15 17:12:00 IST
  • சீதையின் நீர் வேட்கையைத் தணிப்பதற்காக ராமர் வில்லூன்றி இத்தீர்த்தத்தை ஏற்படுத்தினார்.
  • இதன் மேல்கரையில் பழமையான ராமர் கோயில் காணப்படுகின்றது.

மங்கள தீர்த்தம்

தங்கச்சிமடம் சாலைக்குத் தென்புறமாக மங்கள தீர்த்தம் அமைந்துள்ளது.

அமிருதவாபி

இத்தீர்த்தம், தங்கச்சி மடத்துக்கு அருகிலுள்ள ஏகாந்தராமசுவாமி கோயிலுக்குள் இருக்கும் கிணறு.

ரணவிமோசன் தீர்த்தம்

இத்தீர்த்தம், ஏகாந்த ராமசுவாமி கோயிலுக்கு அருகில் வடக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது.

இத்தீர்த்தத்தில் நீராடினால் எல்லா இரணங்களும் நீங்கும்.

வில்லுருணி

இரண விமோசன தீர்த்தத்துக்கு வடக்கே கடற்கரையருகே இத்தீர்த்தம் அமைந்துள்ளது.

கடற்கரையருகேயிருந்தாலும் மிகவும் நல்ல தண்ணீர்.

சீதையின் நீர் வேட்கையைத் தணிப்பதற்காக இராமபிரான் வில்லூன்றி இத்தீர்த்தத்தை ஏற்படுத்தினார்.

லட்சுமண தீர்த்தம்

இத்தீர்த்தம், ராமேசுவரம் கோவிலுக்கு மேற்கே செல்லும் சாலையில் அரை மைல் தொலைவில் உள்ள திருக்குளம்.

இலட்சுமணர் சிவலிங்கப் பிரதிட்டை செய்து, திருமஞ்சனம் செய்விப்பதற்காக ஏற்படுத்திய தீர்த்தம் இது.

ராம தீர்த்தம்

லட்சுமண தீர்த்தத்திற்குக் கிழக்கே உள்ள திருக்குள தீர்த்தம் இது.

இதன் மேல்கரையில் பழமையான ராமர் கோயில் காணப்படுகின்றது.

Similar News