ஆன்மிக களஞ்சியம்

பஞ்சரங்க ஆலயங்கள்

Published On 2024-03-31 09:48 GMT   |   Update On 2024-03-31 09:48 GMT
  • சென்னை மீஞ்சூர் அருகே தேவதானம் என்ற கிராமத்தில் வடஸ்ரீரங்கம் என்று ஒரு ஆலயம் உள்ளது.
  • இங்கும் ரங்கநாத பெருமாள் சயன கோலத்தில் காட்சியளிக்கிறார்.

பஞ்சரங்கம் என்று கூட 5 தலங்களை நமது முன்னோர்கள் வரையறை செய்துள்ளனர்.

ஸ்ரீரங்க பட்டினத்தில் உள்ள ஆலயம் ஆதிரங்கம் என்றும், திருப்பேர் நகரில் உள்ள ஆலயம் அப்பால ரங்கம் என்றும்

ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆலயம் மத்திய ரங்கம் என்றும், கும்பகோணத்தில் உள்ள ஆலயம் சதுர்த்த ரங்கம் என்றும்,

மயிலாடுதுறையில் உள்ள ஆலயம் பஞ்ச ரங்கம் என்றும் வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த பஞ்சரங்க ஆலயங்களை தவிர மேலும் சில ரங்க ஆலயங்கள் ரங்கநாதருடன் தொடர்புடையதாக கூறப்படுகின்றன.

சீர்காழி தாலுகாவில் மாதானைக்கு அருகே வடரங்கம் ஸ்ரீரங்கநாதர் பெருமாள் ஆலயம் உள்ளது.

நாகை மாவட்டம் கீழையூரில் கீழரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஆலயம் உள்ளது.

இந்த ஆலயம் ஸ்ரீரங்கத்துக்கு அபிமான தலமாக விளங்கும் தலமாகும்.

திருத்துறைப்பூண்டி அருகேயும் ஆதிரங்கம் என்று ஒரு ஆலயம் உள்ளது.

சென்னை மீஞ்சூர் அருகே தேவதானம் என்ற கிராமத்தில் வடஸ்ரீரங்கம் என்று ஒரு ஆலயம் உள்ளது.

இங்கும் ரங்கநாத பெருமாள் சயன கோலத்தில் காட்சியளிக்கிறார்.

Tags:    

Similar News