ஆன்மிக களஞ்சியம்

பங்குனி விரதம் இருப்பது எப்படி?

Published On 2024-03-22 12:34 GMT   |   Update On 2024-03-22 12:34 GMT
  • வேலை உள்ளவர்கள் “ஓம் சரவண பவ” என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம்.
  • அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோவிலிற்கு செல்லலாம்.

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத்தில் பவுர்ணமி நிலவு ஒளிவீசும் தினத்தை ஒரு விரத நாளாகவே கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் மேலும் திருமணம் ஆன பெண்களின் மாங்கல்யம் பலம் பெறும்.

ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம்.

அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்க வேண்டும்.

அன்று முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம்.

வேலை உள்ளவர்கள் "ஓம் சரவண பவ" என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம்.

இதன் மூலம் நமது மனமானது இறைவனையே நினைத்த வண்ணம் இருக்கும்.

அதனால் மனம் செம்மை அடையும்.

அன்று ஒரு வேலை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும்.

வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கபட்டவர்கள் பால், பழம் போன்றவற்றை உண்ணலாம்.

நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் முருகன் கோவிலிற்கு சென்று அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோவிலிற்கு செல்லலாம்.

முடிந்தால் பகல் வேளையில் ஏழை எளியவர்ளுக்கு அன்னதானம் செய்யலாம்.

இந்த திருநாளில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர் வழங்குபவர் வளம் பெறுவார்கள்.

மாலையில் அருகில் உள்ள முருகன் கோவில் அல்லது முருகன் சன்னதி உள்ள கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து வரலாம்.

பிறகு இரவில் சாத்வீக மான உணவை எடுத்துக் கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

Tags:    

Similar News