ஆன்மிக களஞ்சியம்

நாராயணவனம் "கல்யாண பெருமாள்"

Published On 2024-02-18 17:52 IST   |   Update On 2024-02-18 17:52:00 IST
  • அதில் குறிப்பிடத்தக்கது நாராயண வனம் நகரில் உள்ள பெருமாள் ஆகும்.
  • ஒன்று தமிழகத்தில் உள்ள குணசீலம். மற்றொன்று ஆந்திராவில் உள்ள நாராயண வனம்.

நாகலாபுரம் வேதநாராயண சுவாமி ஆலயத்தை சுற்றிலும் ஏராளமான சிறப்பு வாய்ந்த பழமையான ஆலயங்கள் உள்ளன.

அதில் குறிப்பிடத்தக்கது நாராயண வனம் நகரில் உள்ள பெருமாள் ஆகும்.

இந்த தலத்தில்தான் திருப்பதி வெங்கடாசலபதி பத்மாவதி தாயாரை திருமணம் செய்துகொண்டதாக ஐதீகம்.

அதுமட்டுமின்றி பத்மாவதி தாயாரின் அவதார தலமும் இதுதான். இந்த தலத்தில் பெருமாள் உடைவாள், கை காப்பு ஆகிய இரண்டும் அணிந்து காணப்படுகிறார்.

இந்தியாவில் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே பெருமாள் இத்தகைய கோலத்தில் காணப்படுகிறார்.

ஒன்று தமிழகத்தில் உள்ள குணசீலம். மற்றொன்று ஆந்திராவில் உள்ள நாராயண வனம்.

எனவே இந்த ஆலயம் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொண்டதால் இந்த ஆலயம் திருப்பதிக்கும் முந்தைய பழமை சிறப்பு கொண்டதாக கருதப்படுகிறது.

இந்த தலத்தில் பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொண்டதால் பெருமாளை "கல்யாண பெருமாள்" என்று அழைக்கிறார்கள்.

திருமண யோகம் தரும் தலமாகவும் நாராயண வனம் பெருமாள் கருதப்படுகிறார்.

எனவே நாகலாபுரம் வரும் பக்தர்கள் மிக அருகில் உள்ள இந்த தலத்துக்கும் வந்து செல்லலாம்.

ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்குப் போகும் சாலையில் நகரியில் இருந்து சுமார் 15.கி.மீ. தூரத்தில் உள்ள திருத்தலம் இது.

நாராயணவனக் கோவில் கோபுரம் வெகு தூரத்திலிருந்தே நம் கண்ணைக் கவர்கிறது.

அழகான உயரமான கோபுரம் அமைந்த பெரிய கோவில், இந்த இடம் தான் ஸ்ரீவேங்கடேசப் பெருமானுக்கு கல்யாணம் நிகழ்ந்த பகுதியாகும்.

இந்த ஊரில் ஆகாச ராஜன் புத்திரியாகத் தோன்றிய பத்மாவது தேவியை, ஸ்ரீநிவாசராகப் பெருமாள் திருமணம் புரிந்ததாக புராண வரலாறு கூறுகிறது.

இந்த வனத்தில் தான் ஸ்ரீநிவாசரைத் தன் தோழியருடன் பத்மாவதி தேவியார் பார்த்து மையல் கொண்டாள் என்று புராணம் சுவைப்பட குறிப்பிட்டுள்ளது.

இந்த தலத்தில் எழிலோடு கூடிய திருமேனியராக மூலவர் ஸ்ரீகல்யாண வேங்கடேசர் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி அளிக்கிறார். அவரது புன்னகை வதனத்தில் சிறிது சிந்தனையும் உள்ளது போல் தோன்றுகிறது.

Tags:    

Similar News