ஆன்மிக களஞ்சியம்

நாகை காரோணர் ஆலயம்

Published On 2024-01-04 16:12 IST   |   Update On 2024-01-04 16:12:00 IST
  • நாகப்பட்டினம் காரோணர் கோவில் நுழைவாயிலில் நாகபரணப் பிள்ளையார் உருவம் உள்ளது.
  • நாகச் சிற்பங்களைக் காணிக்கை செலுத்துவதே இங்குள்ள தனிச் சிறப்பாகும்.

நாகப்பட்டினம் காரோணர் கோவில் நுழைவாயிலில் நாகபரணப் பிள்ளையார் உருவம் உள்ளது.

இக்கோவிலின் தொன்மைக்குச் சான்றாக விளங்கும் இந்த நாகப்பரணப் பிள்ளையார் தலை மேல் ஐந்து தலைப்பாம்புப் படம் விரிந்துள்ள அழகைக் காணலாம். ராகு கேதுக்களை மகிழ்விக்க நாகப்பரண பிள்ளையாரை வழிபடலாம்.

கோவிலுக்குச் சென்றாலே முட்டையுடன்தான் செல்ல வேண்டும் என்பது போல் எழுதாத விதியாக

ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சி தத்தமங்கலம் பாம்பாளம்மன் கோவிலுக்கு வரும் பெரும்பாலோர் முட்டையுடன் வருவதைக் காண முடியும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதிக்கு அருகே உள்ள பேரையூர் நாகநாத சுவாமி கோவில் அந்த மாவட்டத்தில் பெரும் புகழோடு விளங்குவதாகும்.

ஆதிசேடன் வழிபட்ட தலம்.

நாகச் சிற்பங்களைக் காணிக்கை செலுத்துவதே இங்குள்ள தனிச் சிறப்பாகும். கோவிலில் நூற்றுக் கணக்கான நாகச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

Tags:    

Similar News