ஆன்மிக களஞ்சியம்

மனக்குறை நீக்கி ஐஸ்வர்யத்தை தருவேன் என நாராயணனே சத்தியம் செய்த விரதம்

Published On 2024-04-12 11:17 GMT   |   Update On 2024-04-12 11:17 GMT
  • இவ்வாறு அவர் சத்தியம் செய்வதால் அவரை சத்திய நாராயணன் என்று அழைத்து வழிபடுகிறோம்.
  • பொதுவாக சத்திய நாராண பூஜை சித்திரையில் தொடங்குவது மிகவும் நல்லது.

சந்திரன் மனதிற்கு அதிகாரமானவர். ஆகவே, பவுர்ணமி காலங்களில் மனிதனுடைய மனம் வேகம் கொள்ளும்.

ஆகவே, அந்தசமயம் மனப் பாதிப்பு உள்ளவர்கள் விவேகமில்லாமல் நடந்து கொள்வர்.

மேலும், சந்திரனின் அதிதேவதை நீர். பவுர்ணமி காலங்களில் கடலில் அலைகள் பெருக்கெடுக்கும்.

சுனாமி போன்ற அலைகள் கூட பவுர்ணமி காலங்களில் வரும்.

ஒவ்வொரு மாதத்தின் பெயருக்கும் சந்திரன் பவுர்ணமியன்று எந்த நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறாரோ அந்த நட்சத்திரத்தின் பெயரையே வைத்துள்ளார்கள்.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று காலை முதல் விரதம் இருந்து மாலையில் சந்திரனைப் பார்க்க பின் சத்திய நாராயண பூஜை செய்ய வேண்டும்.

இந்த விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு மனக் குறைகள் நீக்கி சகல ஐஸ்வர்யங்களையும் தருவேன் என்று ஸ்ரீமந் நாராயணன் சத்தியம் செய்துள்ளதாக கந்தபுராணம் கூறுகிறது.

இவ்வாறு அவர் சத்தியம் செய்வதால் அவரை சத்திய நாராயணன் என்று அழைத்து வழிபடுகிறோம்.

பொதுவாக சத்திய நாராண பூஜை சித்திரையில் தொடங்குவது மிகவும் நல்லது.

Tags:    

Similar News