ஆன்மிக களஞ்சியம்

கால்நடையாக பழனி சென்ற அண்ணாசாமி

Published On 2024-04-17 11:45 GMT   |   Update On 2024-04-17 11:45 GMT
  • அப்போது அவருக்கு மேலும் மேலும் பழனிப் பரமன்பால் பக்தி ஓங்கி வளர்ந்து வந்தது.
  • ஒரு நாள் அவர் ஞானதண்டாயுதபாணியை மலைமேற் சென்று தரிசித்துக் கொண்டு படிகளில் கீழிறங்கி வந்தார்.

 இந்த நிலையில் நாயகருக்கு பழனி செல்ல வேண்டும் என்னும் ஆர்வம் மிகவும் பெருகி வந்தது.

அந்நாளில் ரெயில் முதலிய வசதிகள் ஏதும் இல்லாமல் இருந்தன.

பெரும்பாலும் கால் நடையாகவே யாத்திரிகர்கள் தலங்களுக்குச் செல்வது வழக்கம், நாயக்கர் பழனி சென்று முருகனை வழிபடும் பேரார்வம் மேலிட்டு ஒரு நாள் திடீரென்று புறப்பட்டு விட்டார்.

கால் நடையாகவே பல தலங்களையும் தரிசித்து பழனி சென்று அடைந்தார்.

அங்கு ஞான தண்டாயுதபாணியைத் தரிசித்து, மிகுந்த அன்புடன் வலம் வந்து வழிபட்டுப் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

பழனியிலேயே சில நாட்கள் பக்திப்பெருக்குடன் தங்கி மகிழ்ந்து இன்புற்றார்.

அப்போது அவருக்கு மேலும் மேலும் பழனிப் பரமன்பால் பக்தி ஓங்கி வளர்ந்து வந்தது.

ஒரு நாள் அவர் ஞானதண்டாயுதபாணியை மலைமேற் சென்று தரிசித்துக் கொண்டு படிகளில் கீழிறங்கி வந்தார். 

Tags:    

Similar News