ஆன்மிக களஞ்சியம்

கருட கொடி சித்தரின் மகிமை

Published On 2024-02-03 12:11 GMT   |   Update On 2024-02-03 12:11 GMT
  • சித்தர்காடு சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தின் பிரகாரத்தில் தனியாக ஆண்டாள் சன்னதி உள்ளது.
  • கருடனை நீண்ட நாட்களாக வழிபட்டு பலன் பெற்றார்.

சித்தர்காடு சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தின் பிரகாரத்தில் தனியாக ஆண்டாள் சன்னதி உள்ளது.

அந்த ஆண்டாள் சன்னதியில் இருக்கும் முன்பக்க மண்டபத்தின் ஒரு தூண்ணில் கருடகொடி சித்தரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் கருடகொடி சித்தரின் அருள் அலைகள் இருப்பதாக நம்புகிறார்கள்.

கருடகொடி சித்தர் பல்வேறு ஆற்றல்களை பெற்றவர்.

மூலிகை மருத்துவத்தில் மிகுந்த திறமை பெற்றிருந்தார்.

கருடனை நீண்ட நாட்களாக வழிபட்டு பலன் பெற்றார்.

இதனால்தான் அவருக்கு கருடகொடி சித்தர் பெயர் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.

இந்தத் தலத்தில்தான் கருடக்கொடி சித்தர் பல காலம் வசித்து, இங்குள்ள திருக்குளத்திலேயே ஜீவசமாதி அடைந்தார் என்பர்.

இவர் பலருக்குக் கண் நோய் போக்கியவர்.

பார்வையற்றவர்களுக்குப் பார்வை அளித்த மகான்.

இவர் இந்த ஆலயத்தின் ஆண்டாள் சந்நிதி எதிரேயுள்ள தூணில் சாந்நித்யத்துடன் எழுந்தருளியுள்ளார்.

இங்கு நெய்தீபம் ஏற்றி வலம் வந்து வழிபட, கண்நோய் குணமாகும்.

முன்மண்டபத் தூண்களில் நரசிம்மரின் உருவங்கள்.

யோக நரசிம்மராக, உக்கிர நரசிம்மராக, ஸ்ரீலட்சுமி நரசிம்மராக கலையழகு மிகக் காட்சி தரும்.

ஆண்டாள் சன்னதியில் அவரது சிற்பம் இருப்பதால் அந்த பகுதியில் அவர் ஜீவசமாதி அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

அந்த தூணில் உள்ள சிற்பத்தில் கருடகொடி சித்தர் ஒருகையில் கமண்டலமும், மற்றொரு கையில் கருட கொடியையும் வைத்தபடி காட்சி தருகிறார்.

Tags:    

Similar News