- அந்த வண்டிகள் வந்து நின்ற இடமே வண்டிக்குப்பம் என்று இன்றும் பெயர் வழங்கப் பெறுகிறது.
- அம்பிகைக்கு சுந்தரநாயகி, பாலாம்பிகை, இளங்கிளியம்மை, என்ற திருப்பெயர்கள் உண்டு.
பாண்டிய நாட்டு அரசன் ஒருவன் தன் நாட்டிலுள்ள கோவில் ஒன்றில் திருப்பணிக்காகக் கங்கை ஆற்றின் மணல் மூட்டைகளை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு வந்தான்.
அப்போது அந்த வண்டிகள் இந்த இடத்தின் அருகில் வந்து மேலே செல்லாமல் நின்றுவிட்டன.
அவற்றை ஊக்கிச் செலுத்த முயன்றனர்.
அதனால் வண்டிகளின் அச்சுகள் முறிந்து விட்டன.
அந்த செய்தி, அந்த மன்னனுக்கு வான் ஒலி வழியாகச் கேட்கவே, அவனே நேரில் வந்து இந்தக் கோவிலின் திருப்பணிகளைச் செய்வித்தான்.
அந்த வண்டிகள் வந்து நின்ற இடமே வண்டிக்குப்பம் என்று இன்றும் பெயர் வழங்கப் பெறுகிறது.
இறைவன் சுயம்பு உருவானவர், இவர் பாக்கபுரேசர், ஆட்சீசர், ஆட்சி கொண்டார், ஸ்திரவாசபுரீஸ்வரர், முலைக் கானமுடையார் என்னும் திருப்பெயர்களைக் கொண்டவர் என்பதைக் கல்வெட்டுக் குறிப்புகளாலும் ஏனைய குறிப்புகளாலும் ஏனைய குறிப்புகளாலும் அறிகிறோம்.
அம்பிகைக்கு சுந்தரநாயகி, பாலாம்பிகை, இளங்கிளியம்மை, அதிசுந்தர மின்னாளம்மை என்ற திருப் பெயர்கள் உண்டு.