ஆன்மிக களஞ்சியம்

ஆலய வழிபாடு முறை

Published On 2024-02-23 18:27 IST   |   Update On 2024-02-23 18:27:00 IST
  • முதலில் ஆலயத்திற்குள் நுழையும்போது, கோபுரத்தை வணங்கி விட்டு செல்ல வேண்டும்.
  • ஆலயத்தின் உள்ளே சென்றதும் கொடி மரத்தை வணங்க வேண்டும்.

முதலில் ஆலயத்திற்குள் நுழையும்போது, கோபுரத்தை வணங்கி விட்டு செல்ல வேண்டும்.

ஆலயத்தின் உள்ளே சென்றதும் கொடி மரத்தை வணங்க வேண்டும்.

அடுத்து விநாயகப் பெருமானையும் நந்தியம் பெருமானையும் வழிபட்டு, வழிபாட்டைத் தொடங்க வேண்டும்.

அதன்பிறகு பிரதான மூலவரையும், அனைத்து பரிவார தெய்வங்களையும் வழிபட்டு வர வேண்டும்.

1, 3, 5 என்ற அடிப்படையில் பிரகாரம் சுற்ற வேண்டும்

நிறைவாக சண்டிகேஸ்வரரிடம் சொல்லிக் கொள்ள வேண்டும்.

கோவிலில் அபிஷேகம் நடைபெறும் சமயம் பிரகாரம் சுற்றக் கூடாது.

கோவிலுக்குள் கோபம் கொள்ளுதல், கடுமையான வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.

தெய்வத்தின் பெயரை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும்.

கற்பூர தீபம் காட்டும்போது மனதை ஒருநிலைப்படுத்தி சுவாமியைக் காண வேண்டும்.

நந்தி, மயில், மூஞ்சுறு வாகனங்ளுக்கு நடுவில் செல்லக் கூடாது.

ஆலயங்களில் வழங்கும் நைவேத்தியப் பிரசாதங்களை இரண்டு கைகளாலும், பயபக்தியுடன் வாங்கி பயன்படுத்துவது நல்லது.

ஆலயத்தில் வழிபாடு நடக்கும்போது, நெட்டி ஒடித்தல், சோம்பல் முறித்தல் கூடாது.

வெற்றிலை, பாக்கு அர்ச்சனையில் சேர்க்க வேண்டும். நாம் அதை கோவிலுக்குள் சுவைத்துப் பார்க்க கூடாது.

ஆலயத்தை விட்டு வெளியில் வரும்போது மீண்டும் கோபுரத்தை வணங்கி வருவது நல்லது.

Tags:    

Similar News