என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

பரிக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில்
- ஸ்ரீரங்கம் போல் இந்த இடமும் சிறப்பு மிகுந்தது.
- ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கிழக்கு முகமாக வீற்றிருக்கிறார்.
விழுப்புரம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் 21 கி.மீ. தொலை தூரத்தில் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது.
இந்த புனிதமான இடம் இரண்டு நதிகளுக்கு இடையில் (தென்பெண்ணை, கடிலம் ஆறுகளுக்கு) அமைந்துள்ளது.
ஸ்ரீரங்கம் போல் இந்த இடமும் சிறப்பு மிகுந்தது.
இதனுடைய சரித்திரப் பெயர் பரிக்கல். கிராமத்தின் நடுவில் இக்கோவிலுள்ளது. விமானத்தின் மேற்கூரை அஷ்டாங்க விமானம் எனப்படும்.
பக்தர்கள் நுழைவாயிலில் ஆஞ்சநேயரையும், விநாயகரையும், நாகர்களையும் பிரகாரத்திலும் சேவிக்கலாம்.
கருடனை சேவித்த பிறகு மூலவர் சந்நிதியில் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபடலாம்.
ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கிழக்கு முகமாக வீற்றிருக்கிறார்.
ஸ்ரீகனகவல்லி தாயாரைத் தம்முடைய மடியில் இருத்திக் கொண்டுள்ளார்.
இவர் சுயம்பு மூர்த்தியாவார். ஸ்ரீவியாசராயர் ஆஞ்சநேயரின், 732 சிலைகளை தென் இந்தியாவில் நிறுவினார்.
அவற்றில் இங்குள்ள ஆஞ்சநேயரும் ஒருவராவார்.
மற்றொரு ஆஞ்சநேயர் நல்லாத்தூர் திருத்தணிக்கு அருகிலுள்ள கோவிலில் உள்ளார்.






