
இன்றைய ராசி பலன்கள்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறக் கையிருப்பை கரைக்க நேரிடும். ஆரோக்கியம் சீராகும்.
வார பலன்கள்
இந்த வாரம் எப்படி 23-5-2022 முதல் 29-5-2022 வரை
ராசி அதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்தில் விரயாதிபதி குருவுடன் சேர்க்கை பெற்றதால் சுப விரயங்கள் அதிகரிக்கும். சிலர் வெளிநாடு, வெளி மாநிலத்திற்கு தொழில் ரீதியான பயணம் அல்லது சுற்றுலா சென்று வரலாம்.
சிலருக்கு இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய நேரும். 5-ம் அதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் படித்து முடித்த மகன், மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலர் பிள்ளைகளின் உயர்கல்விக்காக கடன் பெறலாம். கர்ப்பிணிகளுக்கு ஆண் குழந்தை பிறக்கும். 2,7-ம் அதிபதி சுக்ரன் ராசியில் ராகுவுடன் நிற்பதால் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். திருமண முயற்சிகள் சித்திக்கும்.
வியாபாரிகள் புதிய முதலீட்டைத் தவிர்க்க வும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்று மிகைப்படுத்தலாக இருக்கும். சகோதர, சகோதரிகளிடம் நிலவிய பகைமை மறையும். இந்த வாரம் முழுவதும் விறுவிறுப்பான நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து உங்களை மகிழ்விக்கும். அமாவாசையன்று பசுவிற்கு அகத்திக்கீரை அளித்து வழிபடவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தமிழ் மாத ஜோதிடம்
வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை
வெள்ளை உள்ளமும், விடாப்பிடியான குணமும் கொண்ட மேஷ ராசி நேயர்களே!
வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஆனால் தனாதிபதி சுக்ரன், விரயாதிபதி குருவுடன் கூடி விரய ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கிறார். எனவே வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும்.
மீன - செவ்வாய் சஞ்சாரம்
வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அஷ்டமாதிபதியாக இருக்கும் செவ்வாயும் 12-ம் இடத்திற்குச் செல்லும் போது, திட்டமிடாது செய்யும் சில காரியங்களில் வெற்றி கிடைக்கும். வீண் பழிகளில் இருந்து விடுபடுவீர்கள். என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம், விலை உயர்ந்து உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யப்போகிறது. விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள்.
சனி - செவ்வாய் பார்வைக் காலம்
வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப் போகிறார். எனவே விரய ஸ்தானம் வலுக்கிறது. இதனால் வாங்கிய இடத்தை விற்கும் சூழ்நிலை ஒரு சிலருக்கு ஏற்படலாம். கோபத்தின் காரணமாக சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.
புதன் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்
வைகாசி 7-ந் தேதி, மேஷ ராசியில் புதன் வக்ர நிவர்த்தியாகிறார். இதனால் சகோதர ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். இதனால் பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். வழக்குகளில் திருப்பம் ஏற்படும். திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
மேஷ - சுக்ரன் சஞ்சாரம்
இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி உங்கள் ராசிக்கு வருகிறார். இதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றியாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கல்யாண முயற்சி கைகூடும்.
மகரச் சனியின் வக்ர காலம்
உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவர் வைகாசி 11-ந் தேதி முதல் மகரத்தில் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. தொழில் வளர்ச்சியில் தடைகள் ஏற்படலாம். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். திட்டமிட்ட பணிகளை குறித்த நேரத்தில் செய்ய இயலாது. வாகனங்களால் தொல்லையுண்டு. வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளிலும் குறுக்கீடு வரலாம். இக்காலத்தில் சனிபகவானையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.
இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டு வாருங்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:மே: 19, 20, 23, 24, 30, 31, ஜூன்: 4, 5 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்க வழிபாட்டில் கவனம் செலுத்துங்கள். குலதெய்வ வழிபாடு குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும். கணவன் - மனைவி உறவு திருப்தி தரும். உறவினர்களை யும், உடன்பிறப்புகளையும் அனுசரித்துச் செல்லுங்கள். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். சனியின் வக்ர காலத்தில் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டால் வீண் பழி உண்டாகாது.
ஆண்டு பலன் - 2022
தைரியம் நிறைந்த மேஷ ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் குரு மற்றும் சனியின் சஞ்சாரம் உங்களுக்குச் சாதகமாக உள்ளது. ராகு கேதுவின் சஞ்சாரம் சாதகமற்று இருப்பதால் உங்களின் முயற்சிகள் சிறு மன சஞ்சலத்திற்கு பிறகு காரிய சித்தியை ஏற்படுத்தி தரும். இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் நடக்கும்.
உடலிலும் மனதிலும் புதிய தெம்பு பிறக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த செயலையும் நினைத்தவுடன் அவசரமாக செய்யாமல் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்பட வேண்டும். உங்களுடைய வீண் பிடிவாதம், முன் கோபத்தை தவிர்த்து தர்ம சிந்தனையுடன் பிறருக்கு மனக்குறையோ, பாதகமோ இல்லாத நல்ல முடிவை எடுத்தால் வருடத்தின் எல்லா நாட்களும் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாகவே இருக்கும். இந்த ஆண்டிற்கான விரிவான பலன்களை பார்க்கலாம்.
குருவின் சஞ்சார பலன்:- ஏப்ரல் 13 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் மிக யோகமான காலம். உங்களின் எண்ணங்கள் , திட்டங்கள் நிறைவேறும்.பணப் புழக்கம் சரளமாக இருக்கும். சீட்டுப் பணம், ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த /எதிர்பாராத பெரும் தொகை கிடைக்கும். தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வீட்டில் சேரும்.
வீட்டிற்கு தேவையான அதிநவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தன வரவு மிகுதியால் குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். ஒரு சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்து வாங்குவார்கள்.துன்பம் என்றால் என்னவென்றே தெரியாது. பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். வீட்டில் சுப நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆடம்பர விழாக்களில் கலந்து கொள்வீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் வாக்கிற்கு மதிப்பு, மரியாதை உண்டாகும். துணிச்சல் அதிகரிக்கும். புதிய தெம்பு மற்றும் தைரியத்துடன் வீர நடை போடுவீர்கள்.
ஏப்ரல் 13-ல் குரு விரய ஸ்தானத்திற்கு மாறுவது சிறப்பித்துச் சொல்லும் பலன் அல்ல. 12 -ம் இடம் விரய ஸ்தானம் என்பதால் செலவுகளும் கட்டுக்கு அடங்காமல் இருக்கும். வரவிற்கு மீறிய செலவு உண்டாகும். சொத்துக்கள் கை நழுவிப் போகலாம். பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினை நடக்கலாம். வயதானவர்கள் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளிடம் சென்று செட்டிலாகலாம் அல்லது முதியோர் இல்லம் செல்லலாம். பிள்ளைகளின் கல்வி, திருமணம் என சுப விரயமும் உண்டாகும். அலைச்சல் மிகுந்த பயணம் அதிகரிக்கும். கடன் பெற்று அசையும், அசையாச் சொத்து வாங்குவீர்கள். புதிய கடன் பெற்று பழைய கடனை அடைப்பீர்கள்.
சனியின் சஞ்சார பலன்:- தொழில் ஸ்தான அதிபதி சனி 10-ல் ஆட்சிபலம் பெற்று இருக்கிறார்.தொழிலில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழிலில் சாதனை செய்யக் கூடிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். வருமான வரி கட்டக் கூடிய அளவிற்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வாழ்க்கையே போராட்டமாக இருந்தவர்களுக்கு சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதியான வாழ்க்கை அமையும். அன்றாடம் கூலி வேலை செய்து சம்பாதித்தவர்கள் சொந்த தொழில் செய்து பெரும் வருமானம் ஈட்டும் நேரம். வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் வாழ்க்கை தரம் உயரும். தன வரவு சிறக்கும்.
பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். குடும்பம் மகிழ்சியாக இருக்கும். முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு சிறு முயற்சியில் வெற்றி வாய்ப்பை தேடித் தரும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு, வெளி மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்து மகிழ்வீர்கள். போட்டி பொறாமைகள் இருந்தாலும் சமாளித்து வெற்றி போடுவீர்கள்.
26-2-2022 முதல் 6-4-2022 வரை இந்த காலகட்டத்தில் செவ்வாய் சனியுடன் இணைகிறார். ஏற்றுமதி, இறக்குமதி தொடர் பான தொழில் செய்பவர்களுக்கு வாய்ப்புகள் அதி கரிக்கும். உங்களின் ராசி அதிபதி செவ்வாயும் சனியும் பகை கிரகங்கள் என்பதால் சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வும் நேரும். உடலில் இடது கண், பாதங்களில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் தக்க மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுதல் வேண்டும். பயணங்கள் அதிகரிக்கும். வம்பு, வழக்கு அவமானங்கள், ஆரோக்கிய குறைபாடு, எதிர்மறை சிந்தனை கள், எல்லாவற்றிலும் சாதகமற்ற சூழ்நிலை, விபத்துகள் என மன உளைச்சலே மிஞ்சும்.
சிலருக்கு உடல் நலம் பாதிப்பால் மருத்துவமனைக்கு சென்று சில நாட்கள் தங்கி சிகிச்சை செய்ய நேரலாம். குடும்பத்தில் நிம்மதி குறையும். முறையான திட்டமின்மையால் உங்களின் செயல்பாடுகள் உங்களை பதம் பார்க்கும். வெகு நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகள் உங்களுக்கு மன உளைச்சல் தரும். ஒரு சிலருக்கு இன்சூரன்ஸ், பாலிசி முதிர்வு தொகை, உயில் சொத்து கிடைக்கும்.தந்தையின் ஆரோக்யத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ராகு/கேது சஞ்சார பலன்:- ஏப்ரல் 12 வரை ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். இக்கால கட்டத்தில் தொழில் மற்றும் உத்தியோக நிமித்தமாக குடும்பத்தை பிரிந்து செல்ல நேரும். மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் மாற்றிப் பேசி மன குழப்பத்துடன் வாழ்வார்கள். பணத்தாசை அதிகரிக்கும். வேற்று மொழி பேசுபவரால் குடும்பத்தில் நிம்மதி போகும். நேர்வழி, குறுக்குவழி என பல வழிகளில் பணம் பையை நிரப்பும். சேமிப்புகள் முதலீடுகள் அதிகரிக்கும். குழந்தை பாக்கியத்தில் காலதாமதம் ஏற்படும்.
நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் கவனக்குறைவால் பிரச்சனைகளை தானே தேடிக் கொள்வார்கள். சிலரின் வாரிசுகள் குடும்பத்தை விட்டு பிரிவார்கள். திருமண வாழ்க்கையில் நெருடல், மன வேதனை, களத்திரத்துடன் பிரச்சனை இருக்கும். தவறான வாழ்க்கை துணையை தேர்ந்து எடுப்பது அல்லது வாழ்நாள் முழுவதும் மன வேதனை தரும் மறு விவாகம் ஏற்படும். எனவே மேஷ ராசியினர் பேச்சில் சிந்தனையில் கவனத்துடன் இருக்க வேண்டும். 8-ல் உள்ள கேதுவால் தனியாக அமைதியாக இருப்பதை மனம் விரும்பும். பொய்யான வதந்திகளால் பெயர் கெடும். அடிவயிறு தொடர்பான உடல் உபாதைகள் தோன்றலாம்.
12-4-2022-ல் ராகு ராசிக்கும் கேது 7-ம் இடமான களத்திர ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் உருவாகும். 7-ம் இடத்திற்கு சனி பார்வையும் இருப்பதால் திருமண வாய்ப்புகள் தள்ளிப்போகும். கணவன், மனைவிக்கு சிறு கருத்து வேறுபாடு வந்து மறையும். பல நேரங்களில் சம்பந்திகள் சண்டையாகவும் மாற வாய்ப்பு உள்ளது.
ஜனன ஜாதகரீதியான தசாபுத்தி சாதகமற்றவர்களுக்கு விவாகரத்து வரை செல்லும். பல கூட்டுக் குடும்பம் பிரியும். சில பிள்ளைகள் தவறான திருமணத்தால் குடும்பத்தை விட்டு பிரிவார்கள் . உறவினர்கள், நண்பர்களுக்கு பண உதவி செய்தால் திரும்ப வராது. அதுவே கணவன் மனைவி கருத்து வேறுபாடுக்கு காரணமாக அமையும். தொழில் கூட்டாளிகள் இடையே முறையான ஒப்பந்தம் போட்டு தொழில் நடத்த வேண்டும். பணம் கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகையை கையாள்வதைத் தவிர்க்கவும்.
திருமணம்:- சூரிய, சந்திர, செவ்வாய் தசை நடப்பவர்களைத் தவிர பிறருக்கு கோட்சார ராகு /கேதுவால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு. கோட்சார குருவின் 9ம் பார்வை ராசிக்கு ஏழாம் இடமான துலாத்திற்குப் கிடைப்பதால் தோஷ நிவர்த்தி பெற்று ஏப்ரல் 2022-க்குள் திருமணம் முடியும்.
பெண்கள்:பிறந்த வீட்டில் இருந்து வர வேண்டிய சீதனங்கள் கிடைப்பதில் காலதாமதம் இருக்கும். பணிபுரியும் இடத்தில் பெண்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.மன சஞ்சலத்தால் வீட்டு விஷயத்தை பிற ஆண்களிடம் பேசி வம்பை விலை கொடுத்து வாங்கக் கூடாது. பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு.
விவசாயிகள்:-ஏப்ரல் 13--க்குப் பிறகு புதிய மாற்றங்கள் உண்டாகும்.விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். உபரியான விளைச்சல் ஏற்படும். விளை பொருட் களுக்கு சந்தையில் சந்தையில் நல்ல விலை கிடைக்கும். விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழிலில் உள்ளவர்கள் ஏற்றம் பெறுவர். வாழ்க்கை தரம் உயரும். விளை நிலம் தொடர்பான வழக்குகள் இருந்தால் தள்ளுபடியாகும்.
உத்தியோகஸ்தர்கள்:- வேலையின்றி இருந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு, உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள், பதவி உயர்வு சம்பள உயர்வு என்று அனைத்து வித நன்மைகளும் தேடிவரும். அரசு உத்தியோகத்திற்கு முயற்சித்தவர்களுக்கு பணி நியமன ஆணை கிடைக்கும். வேலை பார்த்த இடத்தில் இருந்து வந்த பிணக்குகள் சீராகும். இது வரை நிரந்தர வேலை இல்லாத வர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் வேலை பார்பவர்களுக்கு கம்பெனி செலவில் வெளிநாடு சென்று பணிபுரியும் சந்தர்ப்பம் கிட்டும்.
முதலீட்டாளர்கள்/வியாபாரிகள்:- தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக உதவிக்கரம் நீட்டுவார்கள். இதுவரையில் யோசிக் காத வகையில் விவேகமாக சிந்தனை செய்து தொழிலை வளப்படுத்துவீர்கள்.உற்பத்தி தொழிலில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் ஏப்ரலுக்கு மேல் சிலர் குலத் தொழிலில் இருந்து விடுபட்டு வேறு தொழில் செய்ய ஆர்வம் மிகும். கூட்டுத் தொழில் புரிபவர்கள் தொழில் கூட்டாளிகளிடம் அனுசரித்துச் செல்லவும். புதிய பங்கு தாரர்களைத் தவிர்ப்பது நலம்.
அரசியல்வாதிகள்:- 7-ம் இடத்திற்கு சனிப் பார்வை இருப்பதால் ஏப்ரல் 2022-க்கு மேல் சிலர் கட்சி மாறலாம். கட்சி கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம். ராகு, கேதுக்களின் நிலைப்பாடு சாதகமற்று இருப்பதால் கூட்டாளிகளால் வீண் பழி அல்லது வம்பு, வழக்கு உருவாகலாம். வாக்கில் நிதானம் தேவை. கட்சிப் பணிக்காக அதிக உழைப்பையும், பொருளையும் விரயம் செய்யும் நேரம். பெயர், புகழை தங்க வைக்க கடுமையாக பாடுபட நேரும். சந்தர்ப்பவாதியாக செயல்படாமல் மக்களுக்காக உழைத்தால் நன்மைகள் மிகும்.
மாணவர்கள்:- மாணவ மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதுடன் ஆசிரியர்களின் பாராட்டையும் பெறுவீர்கள். பள்ளி, கல்லூரி கலை நிகழ்சிகளில் கலந்து பரிசுகளும், பதக்கங்களும் பெறுவீர்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகள் புதுத்தெம்பையும், புத்துணர்வையும் கொடுக்கும்.
அஸ்வினி:- வரவுக்கு மேல் செலவு ஏற்பட்டாலும் ஏதேனும் ஒருவகையில் செலவைச் சரி செய்ய தேவையான பணம் வந்து சேரும். கிருஷ்ணரை வழிபட மன நிறைவு ஏற்படும்.
பரணி:- நண்பர்களால் சில அசவுகரியங்கள் ஏற்பட்டாலும் ஆதாயமும் உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வெள்ளிக்கிழமை ராகு வேளையில் பைரவரை வழிபட சிறப்பான யோகம் தானாகவே அமையும்.
கிருத்திகை 1-ம் பாதம்:- நீண்டகாலமாக தொல்லை கொடுத்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக நல்ல முடிவுக்கு வரும்.தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வர சிறப்பான யோகங்கள் தானாகவே அமையும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சுபகிருது வருட பலன்
வீரமான மேஷராசியினரை இந்த தமிழ் புத்தாண்டு உங்கள் வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்ல நல்வாழ்த்துக்கள்.
குரு பகவான் ஆண்டு முழுவதும் 12ம் இடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராகு பகவான் ஜென்ம ராசியிலும் கேது பகவான் ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். 17.1.2023 வரை தொழில் காரகன் சனி 10ல் ஆட்சி பலம் பெறுகிறார்கள். இதனால் எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் உண்டாகும்.சுகபோக வாழ்க்கை கிடைக்கும்.உங்களின் தனித் திறமைகள் வெளிப்படும். லௌகீக நாட்டம் அதிகரிக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம். சிலர் வெளி மாநிலம் , வெளிநாட்டிற்கும் இடம் பெயரலாம். படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும் அற்புதமான தமிழ்புத்தாண்டாக இந்த வருடம் அமையும்.
குடும்பம்: இரண்டாமான குடும்ப ஸ்தானத்திற்கு கோட்சார கிரகங்கள் சாதமான நிலையில் இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் அனுசரணை உண்டு. புத்திர பிராப்தம்உண்டாகும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளுக்கு தொழில், உத்தியோகம், திருமணம், குழந்தை, வீடு வாகன யோகம்போன்ற அனைத்து விதமான பாக்கியங்களும் உண்டாகும். பிள்ளைகளின் சுப காரியங்கள் கோலாகலமாக நடைபெறும்.
விரயாதிபதி குரு 12ல் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் வீட்டிற்கு அழகு, ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வீடு, வாகனம் போன்றவைகள் மூலம் சுப விரயம் உண்டாகும். கேது ராசிக்கு 7ல் சஞ்சரிப்பதால் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த அண்ணன், தம்பிகள் பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். கூட்டுத் தொழில் செய்து வந்த குடும்பங்களில் சில பங்காளிகள் தொழிலை விட்டு விலகலாம். பாகப்பிரிவினையில் கருத்து வேறுபாடு உண்டாகலாம். நட்பு வட்டாரங்கள் விலகிச் செல்வது போன்ற மன உணர்வு வாட்டும்.
ஆரோக்கியம்:6,8ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாதிகளால் ஏற்பட்ட தாக்கம் குறையும்.ஆயுள் பயம் அகலும்.
திருமணம்:தற்போது ராசியில் நிற்கும் ராகுவும் 7ல் நிற்கும் கேதுவும் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்துவதுடன் 7ம் இடத்திற்கு 17.1.2023 வரை சனிப் பார்வையும் இருப்பதால் திருமண முயற்சியில் சில தடை, தாமதங்கள் நிலவ வாய்ப்பு உள்ளது. 4ம் இடமான சுக ஸ்தானத்திற்கும், 8ம் இடமான மாங்கல்ய ஸ்தானத்திற்கும் குருப்பார்வை இருப்பதால் ஜனவரி 2023 க்கு மேல் திருமணம் கை கூடும்.
பெண்கள்:லௌகீக வாழ்வின் அனைத்து இன்பங்களையும் அனுபவிக்க தேவையான வசதி வாய்ப்புகளை ராகு கொடுப்பார். ராகு கொடுக்கும் பணவசதியை அனுபவிக்க விடாமல் தொழில் நிமித்தமாக தம்பதிகள் ஆளுக்கொரு ஊரில் அல்லது நாட்டில் வாழ வேண்டிய சூழலை கேது கொடுப்பார்.வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்வாதாரம் உயரும். பல புதிய பெண் தொழில் முனைவோர்கள் உருவாகுவார்கள். குடும்ப உறவுகளின் ஒற்றுமை நிம்மதியை அதிகரிக்கும். வாழ்க்கையில் செட்டிலாகும் காலம்.பூர்வீகச் சொத்து,தாய்வழிச் சொத்து போன்றவற்றில் பாகப் பிரிவினை நடக்கும். ஆரோக்கியம் சீராகும். கடன் சுமை குறையும்.
மாணவர்கள்:4ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் சுமாராக படித்தவர்கள் கூட நல்ல மதிப்பெண் பெறுவார்கள். காலத்தின் அருமை உணர்ந்து பெற்றோர்கள் மற்றும்ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று படிப்பில் கவனம் செலுத்த வெற்றி உங்களுக்கு கரம் கொடுக்கும். கல்வியில் தடை ஏற்பட்ட மாணவர்கள் மீண்டும் படிப்பைத் தொடர சாதகமான காலமாகும். உங்கள் லட்சியத்தை அடைய நவகிரகங்கள் உதவும்.
முதலீட்டாளர்கள்:சனி 10ல் ஆட்சி பலம் பெற்று இருக்கும் வரை முன்னேற்றம் இருக்கும். இதுவரையில் யோசிக்காத வகையில் விவேகமாக சிந்தனை செய்து தொழிலை வளப்படுத்துவர்கள். பல புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். புதிய கூட்டாளிகளை நம்பி அதிக முதலீடு செய்வதை தவிர்க்கவும். தொழில் அதிபர்களுக்கு அரசின் உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக உதவிக்கரம் நீட்டுவார்கள். நல்ல நம்பிக்கையானவிசுவாசமான வேலையாட்கள் கிடைப்பார்கள். பொதுவாக மேஷத்திற்கு குருவிரயாதிபதி என்பதால் ஆட்சி பலம் பெறுவது சிறப்பல்ல. கடுமையாக உழைக்க நேரும். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. தொழிலை விரிவுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். தொழில் சிறப்பாக நடந்தாலும் பெரிய லாபம் கையில் நிற்காது என்பது தான் கிளைமாக்ஸ்.
அரசியல்வாதிகள்:அதிகாரப் பதிவுகள் தேடி வரும். கட்சி மேலிடம் உங்களுக்கு முக்கியத்துவம், பதவியும் கொடுக்கும். 7ல் கேது இருப்பதால் யாரையும் நம்பி ரகசியத்தை பகிரக்கூடாது. கூட்டணி கட்சிகள், நண்பர்கள் உங்களை எப்பொழுது வேண்டுமென்றாலும் கவிழ்த்தி விடலாம்.எதிர் கட்சியினருக்கு சாதகமானகாலம். பதவியை தக்க வைக்க ஊர் ஊராக அலைந்து விரயம் அதிகமாகும். சிலர் விரயம் என்றால் பொருள் விரயம் என்று தவறாக புரிந்து கொள்கிறார்கள். கவுரவம் குறைந்தாலும் விரையம் தான்.
கலைஞர்கள்:இதுவரை சமுதாய வெளியுலகத்திற்கு தெரியாமல் இருந்த உங்கள் திறமை பாராட்டப்படும் காலம். பல வருடங்களாக நீங்கள் எதிர்பார்த்த ஒரு அற்புத சந்தர்ப்பம் உங்களை தேடி வரும். அந்த வாய்ப்பு உங்களுக்கு பெரிய வாழ்வியல் மாற்றத்தை தரப் போகிறது. சிலர் காலத்தால் அழியாத படைப்புகளைப் படைத்து சாதனை படைப்பீர்கள்.வெளிநாட்டிற்கு சென்று படப்பில் கலந்து கொள்வீர்கள். அதிக அலைச்சல் இருக்கும்.போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும்.
விவசாயிகள்:விவசாயம் வெகு சிறப்பாக நடைபெறும். உற்பத்தி அதிக அளவில் இருக்கும். பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டு. 7ல் கேது இருப்பதால் பங்குதாரர் இல்லாத விவசாயமாக இருப்பது நல்லது பயிருடன் பணமும் வீடு வந்து சேரும்.உங்கள் விளைச்சலுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும். பண வரவு சிறப்பாக இருந்தாலும் 12ல் குரு இருப்பதால்ஏராளமான செலவும் வரும். சிந்தித்து செயல்பட்டால் விரயத்தை குறைக்க முடியும்.
கவனமாக செயல்பட வேண்டிய காலம்
ராகு/கேது: 21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் ராசி மற்றும் 7ம் இடத்தின் பாதிப்பு சற்று மிகைப்படுதலாக இருக்கும். நம்பியவர்களே நம்பிக்கை துரோகம் செய்யலாம் அல்லது உறவுகளுக்காக சூழ்நிலை கைதியாக வாழ நேரலாம். உண்மையானவர்கள் யார் துரோகிகள் யார் என அடையலாம் காணும் காலம். அடிக்கடி மின் சாதனங்கள் பழுதாகி விரயம் உண்டாகும்.
குரு:29.7.2022 முதல் 23.11. 2022 வரை கோட்சாரத்தில் ராசிக்கு 10ல் சஞ்சரிக்கும் சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் தொழில் தொடர்பான தடாலடியானமுக்கிய முடிவுகளை தவிர்க்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களின் நட்பை தவிர்க்க வேண்டும். பணத்திற்கு ஆசைப்பட்டு சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
பரிகாரம்:வயதான தம்பதிகளுக்கு இயன்ற உதவிகளைச் செய்து வர அனைத்து விதமான சுப பலன்களும் தேடி வரும்.
பொருளாதாரத்தில் ஏற்றம்
மேஷ ராசிக்கு சுக்ரன் 2,7ம் அதிபதி என்பதால் கோட்சார ராகு 15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகு சுக்ரனின் பரணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். 6ம் இடத்திற்கும் குருப் பார்வை இருப்பதால் கடன் தொகை, எதிர்பார்த்த நபர்களிடம் இருந்து பண வரவு உண்டாகும். 8ம் இடத்திற்கும் குருப் பார்வை இருப்பதால் அதிர்ஷ்டத்தின் மூலமும் பொருள் வரவு ஏற்படும்.தொழில் மூலம் பணவரவு, லாபம் கிடைக்கும். ஆனால் விரய ஸ்தானத்தில் குரு ஆட்சி பலம் பெற்று இருப்பதால் கையில் பணம் தங்காது. சேமிப்புகள் கரையும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சனிப்பெயர்ச்சி பலன்கள்
மகரத்தில் வருகிறது சனி மகத்தான பலன் கிடைக்கும் இனி!
மேஷ ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான், தொழில் ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கப்போவது யோகம்தான். இதனால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கின்றார். அவரோடு இப்பொழுது சனியும் சேருவதால் ‘நீச்ச பங்க ராஜயோகம்’ ஏற்படுகின்றது. எனவே சனியால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்க, குருவின் அனுகூலமும் கைகொடுக்கும்.
தொழிலில் பணவரவு கூடும்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு வரும் சனி பகவானால் தொழில் வளர்ச்சி சிறப்பாக அமையும். கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுக்கும் ஆற்றல் சனி பகவானுக்கு உண்டு. எனவே தொழிலில் லாபத்தை அள்ளிக்கொடுப்பர். தொல்லை தந்த எதிரிகளின் பலம் குறையும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட அல்லல்கள் அகலும்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை 4, 7, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. அதன்படி பூமி, சுகம், தாய், கல்வி, வியாபாரம், களத்திரம், பயணம், விரயம் ஆகியவற்றைக் குறிக்கும் 4-ம் இடத்தில், சனியின் பார்வை பதிவதால் ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படலாம். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. சனியின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் கல்யாண வாய்ப்புகள் கைகூடிவரும். ஏற்கனவே பேசி கைவிடப்பட்ட வரன்கள், மீண்டும் தேடிவரலாம். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். உறவினர்களோடு மனம் விட்டுப் பேசி சில பிரச்சினைகளுக்கு நல்ல முடிவெடுப்பீர்கள். சனியின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் பயணங் கள் அதிகரிக்கும். இடமாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும்பொழுது, பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் வந்துசேரும். சூரியன் 5-ம் இடத்திற்கு அதிபதியானவர். அவரது சாரத்தில் சனி சஞ்சரிக்கும்பொழுது, பொதுவாழ்வில் புகழ்கூடும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சந்திரன். எனவே இக்காலத்தில் இடம், வீடு வாங்கும் யோகம் உண்டு.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் போது, ராசிநாதன் காலில் சனி உலா வருவதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. இடையில் கும்ப ராசியிலும் சனி சஞ்சரிக்கின்றார். எனவே சுபவிரயங்கள் அதிகரிக்கும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, லாப ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழிலில் மேன்மை உண்டாகும். லாபமும் கிடைக்கும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும்பொழுது, விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். உறவினர்கள் பகை உருவாகலாம். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, ஜென்ம குருவாக வருவதால் இடமாற்றங்களும், ஊர்மாற்றங்களும் ஏற்படலாம்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சியாகும்போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அதன்படி உங்கள் ராசிக்கு, ஜென்மத்தில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் வருவதால் குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும். கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை. வாழ்க்கைத் துணை வழியே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. 8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அந்த நேரத்தில் நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். சிக்கல்களில் இருந்தும், சிரமங்களில் இருந்தும் விடுபடுவீர்கள்.
வெற்றிக்குரிய வழிபாடு
சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனி பகவானுக்குரிய ‘கருநிறக் காகம் ஏறி..’ என்ற சனி கவசப் பாடலைப் பாடி வழிபடுங்கள். அதோடு ஆதியந்தப் பிரபு படத்தை இல்லத்து பூஜை அறையில் வைத்து அருகம்புல் மாலையும், வெற்றிலை மாலையும் அணிவித்து வழிபட்டால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.
குருப்பெயர்ச்சி பலன்கள்
12ம்மிட குருவின் பொதுபலன்கள்: மேஷத்திற்கு குரு 9,12ம் அதிபதி.9ம்மிடம் என்பது பாக்கிய ஸ்தானம்,12ம்மிடம் என்பது விரய ஸ்தானம், அயன, சயன ஸ்தானம். தூர தேச பயணத்தைக் குறிக்குமிடம். 12ம் இடத்திற்கு சனிப் பார்வை உள்ளது. 12ல் உள்ள குருவை சனி பார்ப்பது தர்ம கர்மாதிபதி யோகம்.
சற்றேறக் குறைய இந்த யோகம் 17.1.2023 வரை உள்ளது. இது வரை உங்கள் முன்னோர்களும் நீங்களும் செய்ததர்மம் உங்களை காக்கும் நேரம். உழைப்பும் முயற்சியும் உங்களுக்கு வெற்றியை தரும். தொழில் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். செய்யும் வேலையை சீரும் சிறப்புமாக செய்வீர்கள். செய்யும் தொழிலேதெய்வம் என்ற சிந்தனை இருக்கும். தொழில் ரீதியான புதிய நட்பு வட்டாரங்கள் கிடைக்கும். உயரிய சிந்தனை, செயல்திறன் இருக்கும். தொழிலுக்காக அடிக்கடி வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள நேரும்.
வியாபாரத்தை முறையாக திட்டமிட்டு முழுமையாக செயல்படுத்தி வெற்றிக்கனியை சுவைப்பீர்கள். பொருளாதாரத்தில் சீரான சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தை தேடி அலைந்த கொண்டிருந்த உங்களுக்கு திறமை, முயற்சி, பொறுமை, உழைப்பு ஆகியவற்றை கற்றுக் கொடுத்து வெற்றியை தர குருவும், சனியும் தயாராகிவிட்டார்கள். உங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் பத்தாமிடசனியும், பனிரென்டாமிட குருவும், உழைப்புக்கேற்ற ஊதியத்தை நிச்சயம் வழங்குவார்கள். சனி தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால்இந்த கால கட்டத்தில் புதிய தொழில் துவங்கும் ஆர்வம் பலருக்கும் அதிகரிக்கும். இந்த குருப் பெயர்ச்சி முடியும் வரை புதிய தொழில் தொடங்குவதையும் பெரிய முதலீடுகள் செய்வதையும் தவிர்ப்பது நல்லது.
பாக்கியாதிபதி விரய ஸ்தானம் செல்வதால் சிலர் பூர்வீகத்தை விட்டு ஜீவனத்திற்கு வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். சிலருக்கு சுப விரயம் ஏற்படலாம். சிலர் மன நிம்மதிக்காக பரவச நிலையை அடையச் செய்யும் பக்தி மார்க்க இயக்கத்தில் இணைந்து நிம்மதி தேடலாம். சிலர் இறைவனுக்கு தொண்டு செய்வதே என் கடமை என முழு நேர ஆன்மீகவாதியாக மாறலாம். சிலர் ஆன்மீகப் பணிகள், பொதுச் சேவை மற்றவர்களுக்கு உதவுதல் என நேரம் காலம் பார்க்காமல் தொண்டு செய்வீர்கள். சிலருக்கு சொத்து விற்பனையில் இழப்பு உண்டாகலாம். சிலர் ஒப்பந்த வேலைக்காக குறுகிய காலம் பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். திருமண முயற்சிகள் இழுபறியாகும். ராசியில் ராகுவும் 7ல் கேதுவும் இருப்பது சிறப்பான பலன் அல்ல. கெட்ட சகவாசத்தை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை வங்கி லாக்கரில் வைக்கவும்.
5ம் பார்வை பலன்கள்:ராசிக்கு 4ம் இடத்திற்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது. 4ம் இடம் என்பது சுகஸ்தானம், மாத்ரு ஸ்தானம். கல்வி, சொத்து சுகம் பற்றிக் கூறுமிடம். சனிப் பார்வையும் சேர்ந்து இருப்பதால் கல்வி சம்பந்தமான முயற்சிகள் கால தாமதத்திற்குப் பிறகு சித்திக்கும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. தாயின் ஆசியும் உதவிகளும் கிடைக்கும். சனிப் பார்வை இருப்பதால் தாயின் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் இருந்தாலும் பாதகம் ஏற்படாது.
தாய் வழிச் சொத்திற்காக தாய் மாமனுடன் நிலவிய கருத்து வேற்றுமை சீராகும். இதுவரை வாகன யோகம் இல்லாதவர்களுக்கு அசையும் சொத்து பிராப்தம் உண்டாகும். சிலர் செகண்ட் ஹேண்ட் வாகனம் வாங்கி பயன்படுத்துவார்கள். சிலர் கடன்பட்டு புதிய வீடு கட்டி குடியேறுவார்கள். சிலர் வாஸ்துப் படி வீட்டை திருத்தி அமைப்பார்கள். சிலர் வாடகை வியாபார ஸ்தலத்தை சொந்தமாக்கி கொள்வார்கள். சிலர் தொழிலுக்கு புதியதாக கட்டடம் கட்டும் யோகம் உண்டாகும். பூமி சம்பந்தமாக இருந்த வம்பு வழக்கு, தடை, தாமதங்கள் சீராகும். பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை சுமுகமாகும்.சிலர் பணத் தேவைக்கு சொத்துகளை விற்கும் வாய்ப்பும் உள்ளது. இந்த காலகட்டத்தில் பலர் குறைந்த முதலீட்டில் சில்லறை வணிகம் தொடங்குவார்கள் அல்லது சிலர் முதலீடு இல்லாத பேச்சை மூலதனமாக கொண்ட தொழில் துவங்கி புகழ், சம்பாத்தியம் கிடைக்கப் பெறுவார்கள்.
7ம் பார்வை பலன்கள்:குருவின் 7ம் பார்வைராசிக்கு 6ம் இடத்திற்கு உள்ளது. 6ம் இடம் என்பது ருண, ரோக, சத்ரு ஸ்தானம். வாங்கிய கடனை திருப்பி செலுத்தக் கூடிய மார்க்கம் தென்படும். ஒருவரின் சம்பாத்தியத்தில் அடிப்படை தேவைக்கே சிரமப்பட்ட குடும்பங்களுக்கு பிள்ளைகளின் மூலம் உபரி வருமானம் வரலாம். சிலருக்கு கடன் வழங்க நிதி நிறுவனங்கள் போட்டி போட்டு வீட்டு வாசலுக்குச் வருவார்கள்.
புதுக் கடன் வாங்கி பழைய கடனை அடைக்கலாம்.பணம் தொடர்பான வழக்குகள் தள்ளுபடியாகும். சிலருக்கு வேலைப் பளு மிகுதியால் மிகுதியான உடல் அசதிஇருக்கும். நோயின் தன்மை புரியாமல் பல நாட்களாக பல ஆஸ்பத்தரிக்கு அலைந்தவர்களுக்கு நோய்க்கான காரணம் புரியும். மிகக் குறைந்த செலவில் மாற்று வைத்தியத்தில் நோய் குணமாகும். சிலர் உடல் நல பாதிப்பிற்கு மருத்துவமனையில் தங்கிவைத்திய செலவு செய்ய நேரும். சிலர் நண்பர்களுக்கு ஜாமீன் பொறுப்பேற்று அசலையும், வட்டியையும் சேர்த்து கட்டுகிற நிலை ஏற்படும். ஜென்மத்தில் ராகு இருப்பதால் எளிதில் அண்டை, அயலார் மற்றும் நண்பர்கள் மூலம் பகை உண்டாகும். சிலருக்கு தொழில், உத்தியோக ரீதியாக புதிய எதிரிகள் உருவாகுவார்கள். எனினும் 6ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் அனைத்தும் தவிடு பொடியாகும்.
9ம் பார்வை பலன்கள்:குருவின் 9ம் பார்வை ராசிக்கு 8ம் இடத்திற்கு பதிகிறது. 8ம்மிடம் என்பது வம்பு, வழக்கு , விபத்து அவமானம், அசிங்கம் போன்றவற்றைக் குறிக்குமிடம்.ஒரு மனிதனுக்கு ஏற்படும் பிரச்சனையை இரண்டாக வகைப்படுத்தலாம். முதல் வகை விதி வசத்தால் தானாக வருவது.
இரண்டாவது ரகம் வம்பை விலை கொடுத்து வாங்குவது. முதல் வகைப்படி வழக்குகளில் சாதகமான தீர்ப்பு ஏற்படாது. மலைபோல் நம்பிய நபர்கள் ஏமாற்றலாம். உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், உறவுகள் ஏமாற்றலாம். அல்லது சூழ்நிலை கைதியாக யாரோ செய்த குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்கலாம்.
குடும்பச் சொத்துக்கள் கைமாறிப் போகலாம். இரண்டாவது வகைப்படி பேசியே குடும்ப உறவுகளை வதைக்தலாம். தவறான உணவுப் பழக்கத்தால் கூடாத நட்பால், போதைப் பழக்கத்தால் தீராத நோயை வரவழைக்கலாம். சட்டத்திற்கு புறம்பான விசயத்தில் ஈடுபட்டு சட்டத்தின் பிடியில் சிக்கலாம். அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை வைத்து லாட்டாரி, ரேஸ் என பணத்தை இழக்கலாம்.
கணவரின் ஆரோக்கிய குறைபாட்டால் கவலை அடைந்த பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும். ஆயுள் குறைபாடு நீங்கும். மாங்கல்ய தோஷம் நீங்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டில் வசித்த தந்தை சொந்த ஊர் திரும்புவார்.
குருவின் வக்ர பலன்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை
குருபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் அடையும் காலத்தில் காரிய அனுகூலம், பொருளாதார வளர்ச்சி, குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் தொழில் விருத்தியை ஏற்படுத்தி தருவார். மனம் பற்றற்ற நிலையை விரும்பும். எதிர்மறை எண்ணங்கள் சீராகும். தீய, கெட்ட சிந்தனைகள் நீங்கி தெளிவு பிறக்கும். அவமானங்கள், அவ நம்பிக்கைகள் விலகி குடும்ப பிரச்சனைகள் பேச்சு வார்த்தையின் மூலம் சுமூகமான முடிவிற்கு வரும். கடனுக்காக அல்லது குடும்ப பிரச்சனைக்காக தலைமறைவாக வாழ்ந்தவர்கள் வீடு திரும்புவார்கள்.
சிலருக்கு தனிமையாக வாழ வேண்டும் என்ற உணர்வு சற்று மிகைப்படுத்தலாக இருக்கும்.மனம் எளிமையை விரும்பும்.ஓய்விற்காக வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் மகன் அல்லது மகள் வீட்டிற்குச் சென்றவர்கள் வீடு திரும்பலாம்.சிலர் இரண்டாவது தொழில் தொடங்கும் எண்ணம்அதிகரிக்கும். பண விஷயத்தில் சற்று நெருக்கடி குறையும். பங்குச் சந்தை முதலீட்டில் ஆதாயம் உண்டாகும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். திருமண முயற்சிகள் பலிதமாகலாம்.
பெண்கள்: பெண்கள் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பீர்கள். வீட்டிலும் வேலை பார்க்கும் இடத்திலும் பணிச்சுமை மிகுதியாகும்.பொறுப்புகள் அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பரச் செலவைக் குறைத்து சிக்னமாக வாழ முயற்சிக்க வேண்டும். உற்றார் உறவினர்கள் மத்தியில் உங்கள் கவுரவம் உயரும். விலை உயர்ந்த பொருட்களை நண்பிகளுக்கு இரவல் கொடுப்பது, வாங்குவதை தவிர்க்கவும்.
பரிகாரம்:தினமும் திருக்கோளற்றுப் பதிகம் பாராயணம் செய்யவும். நவகிரக குருவிற்கு நாட்டு சர்க்கரை வைத்து வழிபட்டு தானம் வழங்க விரயம் கட்டுப்படும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
12.4.2022 முதல் 30.10.2023 வரை
ஜென்ம ராகு / ஏழில் கேது
வீரம் மிகுந்த மேஷ ராசியினரே ராகு பகவான் ராசியிலும், கேது பகவான் 7ம் இடத்திலும் அடியெடுத்து வைக்கிறார்கள். குரு பகவான் 12, 1ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். சனி பகவான் 10, 11ம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார்.
ஜென்ம ராகுவின் பலன்கள்:ஒரு மனிதனின் வாழ்வில் மிகக் குறுகிய காலத்தில் நடைபெறும் சுப, அசுப நிகழ்விற்கு ராகுவே காரணம். ஒரு கணப் பொழுதில் உலகில் கண்காணாத மூலையில் இருப்பவரை உலகப் புகழ்பெறச் செய்வது, பெயர், புகழோடு வாழ்பவரை களங்கப்படுத்துவதும, அல்லது உயரிய நிலையில் இருப்பவரை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகச் செய்வது, பணத்தையே பார்க்காதவனுக்கு பெரும் பணத்தை கொடுத்து பணக்காரர்களின் வரிசையில் உட்கார வைப்பது, பணத்தில் மிதந்தவர்களை சிங்கிள் டீக்காக தெருக்கோடியில் நிற்க வைப்பது போன்ற அனைத்தும் ராகு பகவானின் சித்து விளையாட்டுக்கள். ராசிக்குள் நுழையும் ராகு உங்களுக்கு பல்வேறு சுப பலன்களை வழங்கப் போகிறார். எதிர்பார்த்த, எதிர்பார்க்காத பல நல்ல பலன்களை நடத்தி காட்டி உங்களை வியப்பில் ஆழ்த்தப் போகிறார்.
மேஷம் சர ராசி என்பதால் ஓரிடத்தில் நிற்க விடாமல் உங்களை பம்பரமாக சுற்ற விடுவார். உங்களின் தனித் திறமைகள் வெளிப்படும். இதுவரை வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்த உங்களின் திறமைகளை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டப் போகிறார். புகழ், அந்தஸ்து கவுரவத்தை கொடுத்து கோபுரத்தின் உச்சிக்கு ஏற்றி விடப் போகிறார். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியத்தை தருவார்.
தடைபட்ட உரிமைகள் துளிர் விடும். சுகபோக வாழ்க்கை கிடைக்கும். லௌ கீக நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு குறுக்கு வழியிலாவது பணம் சம்பாதித்து விட வேண்டும் என்ற பேராசை மேலோங்கும். எல்லாம் திட்டமிட்டபடி சரியாக நடந்தால் கூட ஜென்ம ராசியை ராகு கடப்பதால் இனம் புரியாத பய உணர்வும் இருந்து கொண்டே இருக்கும். கோட்சார ராகு கிருத்திகை 1, பரணி, அசுவினி ஆகிய நட்சத்திரங்களில் பயணிக்கிறார்.
12.4.2022 முதல்14.6.2022 வரை ராகுவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்:கிருத்திகை சூரியனின் நட்சத்திரம். சூரியன் மேஷத்திற்கு 5ம் அதிபதி என்பதால் தீடீர் பதவி, புகழ், கவுரவம் கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம். தொழில் அதிபர்களுக்கு அரசின் உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக உதவிக்கரம் நீட்டு வார்கள். நல்ல நம்பிக்கையான விசுவாசமான வேலையாட்கள் கிடைப்பார்கள்.
இதுவரையில் யோசிக்காத வகையில் விவேகமாக சிந்தித்து செயல்பட்டு தொழிலை வளப்படுத்துவர்கள். பணப் புழக்கம் சரளமாக இருக்கும். பல வழிகளில் வருமானம் பெருகும். புதிய தொழில் கிளைகள் உருவாக்க ஏற்ற காலம். தடைபட்ட காதல் திருமண முயற்சிகள் கைகூடும். பலருக்கு வயது வித்தியாசம் இல்லாமல் காதல் உண்டாகும்.புத்திர பிராப்தம் உண்டாகும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளுக்கு தொழில், உத்தியோகம், திருமணம், குழந்தை, வீடு வாகன யோகம் போன்ற அனைத்து விதமான பாக்கியங்களும் உண்டாகும்.
15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:பரணி சுக்ரனின் நட்சத்திரம். மேஷ ராசிக்கு சுக்ரன் 2,7ம் அதிபதி என்பதால் பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். சிலருக்கு கலப்பு திருமணம் நடைபெறும். சில தம்பதிகள் தொழில் அல்லது உத்தியோகத்திற்காக பிரிந்து வாழலாம். சில கணவன், மனைவிக்கு சம்பந்தம் இல்லாத 3ம் நபர்களின் தலையீடு அதிகமாகும். சிலருக்கு புதிய வெளிநாட்டு நண்பர்கள் அல்லது தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். சிலருக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சிலருக்கு வாடிக்கையாளர்களால் தேவையற்ற வம்பு வழக்கு உருவாகும்.
21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்:அசுவினி கேதுவின் நட்சத்திரம். ராசிக்கு 7ல் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார். கேது பிரிவினை மற்றும் மொத்த வம்பு, வழக்கின் குத்தகைதாரர். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த அண்ணன், தம்பிகள் பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். பாரம்பரியமாக கூட்டுத் தொழில் செய்து வந்த குடும்பங்களில் சில பங்காளிகள் தொழிலை விட்டு விலகலாம். கூட்டாளிகளிடம் பணப் பரிவர்த்தனையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சிலருக்கு குலத் தொழிலில் இருந்து விடுபட்டு வேறு தொழில் செய்ய ஆர்வம் மிகும். சிலர் முறையற்ற பாகப் பிரிவினைக்கு நீதி மன்றத்தை அனுகலாம். சிலருக்கு சம்பந்திகளுடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். நட்பு வட்டாரங்கள் விலகிச் செல்வது போன்ற மன உணர்வு வாட்டும்.
ஏழாமிட கேதுவின் பலன்கள்:ஏழாமிடம் என்பது வாழ்க்கைத் துணை, நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் ஆகியவற்றைப் பற்றிக் கூறுமிடம். ராகு கொடுக்கும் வள்ளல் என்றால் கேது கெடுப்பதில் வல்லவர். 7ல் வரும் கேது பிரிந்து வாழும் தம்பதிகளை சேர்த்து வைப்பார். ஒற்றுமையாக வாழும் தம்பதிகளைப் பிரிப்பார் அல்லது கருத்து வேறுபாட்டை மிகைப்படுத்துவார். சிலர் மனைவியை கொடுமைப்படுத்தி இன்பம் காண்பார்கள். சிலருக்கு திருமண வாழ்க்கையில் பிடிப்பு குறைந்து இல்லறத் துறவியாக வாழ்வார்கள். மத்திம வயதினரை இல் வாழ்க்கையில் இருந்து விடுபடுவார்கள். சிலர் தேவையற்ற கோபத்தால் அனைவரையும் பகைப்பார்கள். சிலரின் வாழ்க்கை துணைக்கு ஆரோக்கிய கேடு உண்டாகும். ராகு கொடுக்கும் பணத்தை கேது விரயமாக்குவார்
தொழில் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடு, உடன் பணிபுரிபவர்களிடம் மனக்கசப்பு, தவறான தொழில் ஒப்பந்தம் அல்லது பொருத்தமில்லாத கூட்டாளியை தேர்வு செய்தல் போன்ற அசௌகரி யங்கள் நிலவும். பிரிந்து வாழும் தம்பதிகளிடையே சட்ட ரீதியான பிரிவினையை செய்து வைப்பார். ராசிக்கு 7ல் சஞ்சரிக்கும் கேது விசாகம், சுவாதி, சித்திரை ஆகிய நட்சத்திரங்களில் பயணிக்கிறார்.
12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்:விசாகம் குருவின் நட்சத்திரம். குரு மேஷத்திற்கு 9,12ம் அதிபதி. ஆன்மீக குருமார்களின் நட்பும், ஆசியும் கிட்டும்.முன்னோர்களுக்கு முறையான திதி, தர்பணம் செய்து ஆசி பெற முயல்வீர்கள். இஷ்ட, குல, இஷ்ட உபாசனை தெய்வ வழிபாடு பலிதமாகும் காலம். நெடுந்தூர வெளிநாட்டு பயணம் அல்லது தீர்த்த யாத்திரை செய்ய ஏற்ற காலம். பூர்வ புண்ணிய பலத்தால் முறையான சர்ப்ப வழிபாடு செய்பவர்களுக்கு நெடுங்காலமாக முறைப்படுத்த முடியாத பூர்வீக சொத்துக்களுக்கு தீர்வு கிடைக்கும்.
மிகக் குறிப்பாக பிரிக்க முடியாமல் உள்ள சொத்து, பாதை இல்லாத சொத்து, 18 வருடமாக கோர்ட், கேஸில் உள்ள சொத்துக்கு தீர்வு கிடைக்கும். சிலர் வெளி மாநிலம், வெளிநாட்டிற்கும் இடம் பெயரலாம். இந்த கால கட்டத்தில் கோட்சார குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வீடு, வாகனம், பிள்ளைகளின் திருமணம், படிப்பு, நகை வாங்குவது என விரயத்தை சுப செலவாக முதலீடாக மாற்றுவது உங்கள் கைகளில் தான் உள்ளது. படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.
18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்: சுவாதி ராகுவின் நட்சத்திரம். ராசியில் சஞ்சரிக்கும் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது பயணிக்கிறார். ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிப்பதால் நம்பியவர்களே நம்பிக்கை துரோகம் செய்யலாம் அல்லது உறவுகளுக்காக சூழ்நிலை கைதியாக வாழ நேரலாம். உண்மையானவர்கள் யார் துரோகிகள் யார் என அடையலாம் காணும் காலம். அடிக்கடி மின் சாதனங்கள் பழுதாகி விரயம் உண்டாகும். அறிமுகம் இல்லாத நபர்களின் நட்பை தவிர்க்க வேண்டும். பணத்திற்கு ஆசைப்பட்டு சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்: சித்திரை செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் மேஷத்திற்கு ராசி அதிபதி மற்றும் எட்டாம் அதிபதி என்பதால் விபரீத ராஜ யோக அடிப்படையில் உங்களுக்கு எதிர்பாராத சட்டத்திற்கு புறம்பான தீடீர் பணவரவு உண்டாகும்.
உங்களின் திடீர் வளர்ச்சியால் திருஷ்டி அதிகரிக்கும். உங்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் படுவார்கள். இந்த காலகட்டத்தில் பெண்கள் தாலியை கழட்டக் கூடாது. வாகனங்களில் பயணிக்கும் போதும், இயக்கும் போதும் கவனம் தேவை. வழக்குகளில் வெற்றி உண்டாகும்.
ஜென்ம ராகுவால் ஏற்படும் சுப பலன்கள் சற்று அதிகமாகவும் ஏழாமிட கேதுவால் சில பாதகங்களும் இருக்கும். தர்மத்தை கடைபிடிக்க கேதுவால் பாதிதிப்பு ஏற்படாது.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406