என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • தமிழில் “சினேகிதியே”, “நான் அவன் இல்லை-2” ஆகிய திரைப்படங்களில் ஸ்வேதா மேனன் நடித்துள்ளார்.
    • சிறந்த நடிகைக்கான கேரள மாநில அரசின் விருதை ஸ்வேதா மேனன் பெற்றுள்ளார்.

    மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஸ்வேதா மேனன். கேரள மாநிலம் கோழிக் கோட்டில் பிறந்த இவர், "அனசுவரம்" என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கடந்த 1991-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார்.

    மலையாள திரைப்படங்கள் மட்டுமின்றி, ஏராளமான இந்தி மொழி படங்களிலும், தமிழில் "சினேகிதியே", "நான் அவன் இல்லை-2" ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான கேரள மாநில அரசின் விருதை பெற்றுள்ளார்.

    இந்தநிலையில் கடந்த ஆண்டு (2025) நடந்த மலையாள நடிகர்கள் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் மலையாள நடிகர்கள் சங்க முதல் பெண் தலைவர் என்ற பெருமையையும் பெற்றார்.

    இந்தநிலையில் நடிகை ஸ்வேதா மேனன் மீது கொச்சியை சேர்ந்த மார்ட்டின் என்பவர் எர்ணாகுளம் தலைமை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் ஆபாச படங்களில் நடித்து பணம் சம்பாதித்ததாகவும், ஆகவே அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் தனது மனுவில் மார்ட்டின் தெரிவித்திருந்தார்.

    மலையாள நடிகர்கள் சங்க தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் போட்டியிட்ட நேரத்தில் அவரின் மீது தொடரப்பட்ட இந்த வழக்கு மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகைக்கு எதிரான அந்த மனுவை விசாரித்த எர்ணாகுளம் கோர்ட்டு, நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது.

    கோர்ட்டு உத்தரவின் பேரில் நடிகை ஸ்வேதா மேனன் மீது தகவல் தொழில் நுட்ப சட்டம் 67(ஏ) உள்பட 2 பிரிவுகளின் கீழ் கொச்சி மத்திய போலீசார் வழக்கு பதிந்தனர். இந்தநிலையில் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி கேரள ஐகோர்ட்டில் நடிகை ஸ்வேதா மேனன் மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ஸ்வேதா மேனனின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கூறப்பட்ட புகாரின் மீது அவர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டது.

    எம்ஜிஆர் அவர்களை கீழ்த்தரமான பேசியது அதிர்ச்சியையும் மனச்சங்கடத்தை ஏற்படுத்தியது.

    தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்களுள் ஒருவரான ராஜேந்திர பிரசாத் அண்மையில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்டார். அதில் மறைந்த நடிகர் காந்தா ராவ் குறித்து பெருமையாக பேசிய பிரசாத், காந்தாராவ் திரைப்படங்களில் கத்தி சண்டை போடுவதில் வல்லவர் என்றும் அவரின் திறமையை பார்த்து, எம்.ஜி.ஆர் பயந்து நடுங்குவார் என்றும் கூறியிருந்தார்.

    இந்நிலையில் ராஜேந்திர பிரசாத் கருத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    சங்கத்தின் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " நண்பரும் சக நடிகருமான டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களுக்கு, தற்போது தாங்கள் மேடை ஒன்றில் மாபெரும் நடிகர் காந்தாராவ் அவர்களைப் பற்றி பேசிய பாராட்டிய காணொளி கண்டேன்.

    ஒரு நடிகர் இன்னொரு நடிகரை பாராட்டுவது மகிழ்ச்சிக்குரியது. திறனை பரஸ்பரம் சிலாகிப்பது உன்னதமானது. ஆனால் தாங்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை கீழ்த்தரமான முறையில் ஒப்பிட்டு பேசியது அதிர்ச்சியையும் மனச்சங்கடத்தை ஏற்படுத்தியது.

    இது எனக்கு மட்டுமல்ல. இதை காணும் ஒவ்வொரு தமிழனுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும். தமிழருக்கு மட்டுமல்ல. உங்கள் சகாக்களே புண்பட்டு பேசி ஒலி செய்திகள் அனுப்பியுள்ளனர் .

    இச்செயல் கண்டிக்கத்தக்கது. நமக்குள் அதாவது தமிழ், தெலுங்கு சினிமா துறையில் திறமையானவர்களை பரிவர்த்தனை செய்துகொள்வது ஒரு நீண்டகால மரபாகவே இருந்து வருகிறது.

    நடிகர்கள் இயக்குனர்கள் இசை விற்பன்னர்கள் என எல்லாரையும் என்.டி.ஆர். ஏ.என்.ஆர். எஸ் வி ரங்காராவ். சாவித்திரி, சாராதாம்மா. வாணிஸ்ரீ என பட்டியல் நீளும் நடிகர்களை நாங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவராக போற்றுகிறோம்.

    எம்ஜிஆர் அவர்கள் வெறும் நடிகர் மட்டும் அல்ல தமிழகத்தை ஆண்ட தலைவரும் கூட. அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆளுமை என்.டி ராமாராவ் அவர்கள் கட்சி தொடங்கியதற்கு ஒரு முக்கிய காரணமாகவும் எம்.ஜி ஆர் அவர்கள் இருந்திருக்கிறார்.

    நான் விடயத்தை நீட்டிக்க முயலவில்லை. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவனாக மட்டுமல்ல. ஒரு சினிமாகாரனாக உங்களிடமிருந்து ஒரு மன்னிப்பை எதிர்பார்க்கிறேன்.

    அது கட்டாயப்படுத்துதல் காரணமாக இல்லாமல் உங்கள் உள் மனதில் இருந்து அம் மன்னிப்பு வரவேண்டும். எங்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்வீர் என்றே நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.  

    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாக இருந்தது.
    • மறுதணிக்கை மார்ச் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ளப் படம் ஜன நாயகன். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், அரசியலுக்கு வந்தப்பின் அவர் திரையுலகில் நடிக்கும் கடைசித் திரைப்படம் இது என கூறப்படுகிறது.

    இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கே. வி. என் புரொடக்சன்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது.

    முன்னதாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் ஜன.9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் இழுபறியால் தற்போதுவரை வெளியாகவில்லை. மார்ச் 9 அன்று நடக்கவிருந்த மறுதணிக்கையும் (Re-censor), அதிகாரி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மார்ச் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி. உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னரே படம் வெளியாகும் என கூறப்பட்டு வருவதால், ரூ.120 கோடிக்கு வாங்கிய ஓ.டி.டி. உரிமத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் ரத்து செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.  

    முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றினார்.

    ரசிகன், அண்ணன் தம்பி , மாடம்பி போன்ற மலையாள திரைப்படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் ஹரிமுரளி, கேரளாவின் பையனூரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவருக்கு வயது 27 என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    குழந்தை நட்சத்திரமாக சுமார் 50 படங்களில் நடித்த பிறகு, ஹரிமுரளி திரைப்படத் துறையில் VFX கலைஞராக தீவிரமாக செயல்பட்டார். தற்போது உயிரிழந்த ஹரிமுரளியின் உடல் பையனூர் பேபி மெமோரியல் மருத்துவமனையின் பிணவறையில் உள்ளது.

    ஹரிமுரளி, பிரபல குழந்தை நட்சத்திரமாக இருந்த காலத்தில், மலையாளத்தின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றினார். முன்னாள் நடிகர் ஹரிமுரளி, 2008 ஆம் ஆண்டு வெளியான அண்ணன் தம்பி படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து நடித்தார், அதே நேரத்தில் 2004-ஆம் ஆண்டு வெளியான ரசிகன் படத்தில் திலீப்புடன் இணைந்து நடித்தார்.

    ஹரிமுரளியின் படத்தொகுப்பில் உலகம் சுட்டும் வாலிபன், டான் மற்றும் பட்டணத்தில் பூதம் ஆகிய மலையாளப் படங்களும் அடங்கும். 2015-ஆம் ஆண்டு பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த அமர் அக்பர் ஆண்டனி படத்திலும் அவர் நடித்தார்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெற்றது.

    டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் பேனரின் கீழ், இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கி தயாரித்துள்ள 'மண்டவெட்டி' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நடிகை கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் சீரியஸ் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டதால் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெற்றது.

    'மண்டவெட்டி' டார்க், சூப்பர்நேச்சுரல் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இழப்பு, அடையாளம் மற்றும் சர்வைவல் ஆகியவற்றைப் பற்றி ஒரு பெண்ணின் உளவியல் மற்றும் உணர்வுப்பூர்வமான பயணத்தையும் மனித உணர்வுகளின் ஆழத்தையும் அதற்கு பின்னால் உள்ள மர்மத்தையும் பரபரப்பான களத்தில் இந்தப் படம் பேசும்.

    கதையின் தன்மை மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, முழு படப்பிடிப்பும் ஒரே கட்டமாக நடைபெற்றது. கடும் வெப்பம் மற்றும் குளிர் என பல சவால்களையும் கடந்து தினமும் சுமார் 100 கிலோமீட்டர் பயணம் செய்து படக்குழு படப்பிடிப்பு தளத்தை சென்றடைந்தது. முள் நிறைந்த கடினமான நிலப்பரப்பும், கடும் வெயிலும் சவாலாக இருந்தாலும் அவை கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

    'மண்டவெட்டி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில் அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. வலுவான கதை, அர்ப்பணிப்புள்ள படக்குழு என 'மண்டவெட்டி' திரைப்படம் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான மற்றும் ஈர்க்கக்கூடிய திரை அனுபவத்தை வழங்க இருக்கிறது. 

    உலக அளவில் ரூ. 50 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது.

    நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி கடந்த மாதம் வெளியான திரைப்படம் "தாய் கிழவி." ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இந்தப் படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வெளியான பத்து நாட்களில் உலக அளவில் ரூ. 50 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது.

    இந்த நிலையில், தாய் கிழவி திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநரும், நடிகருமான சிங்கம் புலி சமீபத்தில் கமல் ஹாசனை சந்தித்தது குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

    அப்போது அவர், "இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய தம்பி சிவகார்த்திகேயனுக்கும், இயக்குநர் தம்பி சிவகுமாருக்கும் படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. 'மாயாண்டி குடும்பத்தார்', 'மகாராஜா' படங்களுக்குப் பிறகு 'தாய் கிழவி' படத்தில் இந்த கதாபாத்திரத்திற்குதான் எனக்கு அதிக ஃபோன்கால் வந்தது.

    படம் வெளியாவதற்கு முன்பு கமல் சாரை பார்க்க வேண்டும் என்ற ஆசையை மேடையில் வெளிப்படுத்தி இருந்தேன். இரண்டு நாட்களில் கமல் சார் அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. முதலில் அந்த அழைப்பு பொய்யாக இருக்குமோ என்றே நினைத்தேன். பிறகு, அவரை சந்தித்த போது கமல் சார் என்னிடம் நீங்கள் ஏன் இதுவரை என்னை சந்திக்காமல் இருந்தீர்கள்? என்றார்.

    மேலும், ஸ்ருதியிடம் நான் அவரது பி.ஆர். என்று குறிப்பிட்டார். இவ்வளவு பிஸி ஷெட்யூலிலும் எனக்கு நேரம் ஒதுக்கி கமல் சார் என்னிடம் பேசியதற்கு அவரிடம் நன்றி தெரிவித்தேன். அவர் அதற்கு, எனக்கு சினிமா பிடிக்கும் என்றார்," தெரிவித்தார்.

    நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள `தாய் கிழவி' திரைப்படத்தில் சிங்கம் புலி, அருள் தாஸ், பால சரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    • பெற்றோர் எதிர்ப்பை மீறி கும்பமேளா அழகி மோனலிசா முஸ்லிம் நபரை காதலித்து திருமணம் செய்தார்
    • பெற்றோர் தங்கள் காதலை எதிர்த்ததால், மோனலிசா தனது காதலனுடன் கேரளா வந்தடைந்தார்.

    மகா கும்பமேளாவில் வீதி வீதியாக பாசிமணி மாலை விற்றுக் கொண்டிருந்தவர் மோனலிசா. பாசிமணி வாங்கலியோ என கூவி விற்றுக் கொண்டிருந்த மோனலிசாவின் காந்த கண்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார். இதை தொடர்ந்து அவருடன் செல்பி எடுக்க ஏராளமான இளைஞர்கள் திரண்டதால் அவர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டார்.

    இதை தொடர்ந்து மோனலிசா சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். மேலும் கடை திறப்பு விழாக்களிலும் பங்கேற்று அவரது வாழ்க்கை உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.

    மோனலிசா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தின் பூவாரில் நடந்து வருகிறது. இங்கிருந்து, மோனலிசாவும் அவரது காதலன் ஃபர்மான் கானும் தம்பனூர் காவல் நிலையத்திற்குச் சென்று தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக புகார் அளித்தனர்.

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லேவும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஃபர்மான் கானும் ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். பேஸ்புக் மூலம் சந்தித்து பேசி பழகி இவர்கள் காதலிக்க தொடங்கியுள்ளனர். மோனாலிசாவின் காதலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மோனலிசாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க அவர் பெற்றோர் முடிவு செய்தனர். பெற்றோர் தங்கள் காதலை எதிர்த்ததால், மோனலிசா தனது காதலனுடன் கேரளா வந்தடைந்தார். மற்ற மாநிலங்களில் தங்கள் உறவுக்கு பெரும் எதிர்ப்பு ஏற்படும் என்பதில் உறுதியாக இருந்ததால் கேரளாவைத் தேர்ந்தெடுத்ததாக இருவரும் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மோனலிசா திருவனந்தபுரத்தில் உள்ள கோயிலில் வைத்து தனது காதலன் ஃபர்மான் கானை திருமணம் செய்தார். இருவரின் பாதுகாப்புக்கும் கேரளா அரசு உறுதி ஏற்றுள்ளது.

    மோனலிசா திருமணத்தில் கேரளா அமைச்சர் சிவன்குட்டி மற்றும் சிபிஎம் கேரளா மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    திருமணத்திற்கு பிறகு பேசிய அமைச்சர் சிவன்குட்டி, "இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி. இந்த 2 நபர்களின் தைரியத்திற்காக நாம் பெருமைப்பட வேண்டும். கேரளா உண்மையிலேயே சுதந்திரமாக வாழ்வதற்கான இடமாகும்" என்று தெரிவித்தார்.

    இதையடுத்து பேசிய சிபிஎம் மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன், "இரண்டு நபர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். இந்த சிறப்பு தருணத்திற்காக அவர்கள் கேரளாவையும், நாராயண குருவால் கட்டப்பட்ட ஒரு கோவிலையும் தேர்ந்தெடுத்தனர்" என்று கூறினார்.

    • மோனலிசாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க அவர் பெற்றோர் முடிவு செய்தனர்.
    • பெற்றோர் தங்கள் காதலை எதிர்த்ததால், மோனலிசா தனது காதலனுடன் கேரளா வந்தடைந்தார்.

    மகா கும்பமேளாவில் வீதி வீதியாக பாசிமணி மாலை விற்றுக் கொண்டிருந்தவர் மோனலிசா. பாசிமணி வாங்கலியோ என கூவி விற்றுக் கொண்டிருந்த மோனலிசாவின் காந்த கண்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார். இதை தொடர்ந்து அவருடன் செல்பி எடுக்க ஏராளமான இளைஞர்கள் திரண்டதால் அவர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டார்.

    இதை தொடர்ந்து மோனலிசா சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். மேலும் கடை திறப்பு விழாக்களிலும் பங்கேற்று அவரது வாழ்க்கை உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.

    மோனலிசா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தின் பூவாரில் நடந்து வருகிறது. இங்கிருந்து, மோனலிசாவும் அவரது காதலன் ஃபர்மான் கானும் தம்பனூர் காவல் நிலையத்திற்குச் சென்று தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக புகார் அளித்தனர்.

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லேவும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஃபர்மான் கானும் ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். பேஸ்புக் மூலம் சந்தித்து பேசி பழகி இவர்கள் காதலிக்க தொடங்கியுள்ளனர். மோனாலிசாவின் காதலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மோனலிசாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க அவர் பெற்றோர் முடிவு செய்தனர். பெற்றோர் தங்கள் காதலை எதிர்த்ததால், மோனலிசா தனது காதலனுடன் கேரளா வந்தடைந்தார். மற்ற மாநிலங்களில் தங்கள் உறவுக்கு பெரும் எதிர்ப்பு ஏற்படும் என்பதில் உறுதியாக இருந்ததால் கேரளாவைத் தேர்ந்தெடுத்ததாக இருவரும் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மோனலிசா திருவனந்தபுரத்தில் உள்ள கோயிலில் வைத்து தனது காதலன் ஃபர்மான் கானை திருமணம் செய்தார். இருவரின் பாதுகாப்புக்கும் கேரளா அரசு உறுதி ஏற்றுள்ளது.

    மோனலிசா திருமணத்தில் கேரளா அமைச்சர் சிவன்குட்டி மற்றும் சிபிஎம் கேரளா மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    திருமணத்திற்கு பிறகு பேசிய அமைச்சர் சிவன்குட்டி, "இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி. இந்த 2 நபர்களின் தைரியத்திற்காக நாம் பெருமைப்பட வேண்டும். கேரளா உண்மையிலேயே சுதந்திரமாக வாழ்வதற்கான இடமாகும்" என்று தெரிவித்தார்.

    இதையடுத்து பேசிய சிபிஎம் மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன், "இரண்டு நபர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். இந்த சிறப்பு தருணத்திற்காக அவர்கள் கேரளாவையும், நாராயண குருவால் கட்டப்பட்ட ஒரு கோவிலையும் தேர்ந்தெடுத்தனர்" என்று கூறினார்.

    • தாய் கிழவி படம் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது.
    • தாய் கிழவி படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இப்படம் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெளியான 10 நாட்களில் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது.

    இந்நிலையில், தாய் கிழவி படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனரை சிவகார்த்தியன் அறிமுகப்படுத்தினார்.

    SK புரொடக்சன்ஸ் தயாரிக்கும் 10 ஆவது படத்தை அம்மாமுத்து சூர்யா இயக்குவார் என்று மேடையில் வைத்து அவரை சிவகார்த்திகேயன் அறிமுகப்படுத்தினார்.

    ஹன்சிகாவின் 4 ஆண்டு காதல் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

    பிரபல திரைப்பட நடிகை ஹன்சிகா காதல் கணவர் சோஹேல் கதுரியாவை சட்டப்படி பிரிந்தார்.

    மும்பை நீதிமன்றம் விவாகரத்து வழங்கியதை அடுத்து ஹன்சிகாவின் 4 ஆண்டு காதல் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

    கணவர் சோஹால் கதுரியாவிடம் இருந்து விவகாரத்து பெற்ற நடிகை ஹன்சிகா ஜீவனாம்சம் வேண்டாம் என கூறிவிட்டார்.

    சமூக வலைதளத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவதாக திருநங்கை மீது நாஞ்சில் விஜயன் புகார்.

    பிரபல சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் திருநங்கை மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    பணம் பறிக்கும் நோக்கத்தில் சமூக வலைதளத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவதாக திருநங்கை மீது நாஞ்சில் விஜயன் புகார் அளித்துள்ளார்.

    தன்னையும் தனது மனைவியையும் பற்றி அவதூறான கருத்துகளை பரப்பு வருவதால் மன உளைச்சலுக்கு ஆளாவதாக நாஞ்சில் விஜயன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    அவதூறு கருத்துகளை பரப்பும் திருநங்கை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையர் அலுவலகத்தில் நாஞ்சில் விஜயன் மனு அளித்துள்ளார்.

    • அவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கும், மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
    • இது போன்ற சர்ச்சை விஜய் புகழை பாதிக்கும் என்று நான் நம்பவில்லை.

    விஜய்- சங்கீதா விவகாரம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் விவாத பொருளாகி வருகிறது. இது குறித்து நடிகை குஷ்பு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்த சம்பவத்தில் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை. அவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கும், மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதை ஏன் இவ்வளவு பெரிய பிரச்சனையாக்க வேண்டும்.

    இது போன்ற சர்ச்சை விஜய் புகழை பாதிக்கும் என்று நான் நம்பவில்லை. விஜய் ஒரு தலைவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரும் ஒரு மனிதர். அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு. எப்போது எங்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும் என்றார். 

    ×