Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 16 செப். 2026...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
Live news

தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ஊழல் வழக்கு

* அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருவதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

* தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ளனர்.

யு.பி.ஐ பரிவர்த்தனைக் கட்டண வசூல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்

* பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்தும், கொரோனா காலத்தில் நேரடித் தொடர்புகளைத் தவிர்க்கவும் யுபிஐ மூலமான பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டன.

* ரூ.2000-க்கும் மேற்பட்ட வணிகப் பரிவத்தனைகளுக்கும் பொருள் வாங்கும் மக்கள் இந்தக் கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை.

மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வில் உள்ளேன்- மு.க.ஸ்டாலின்

* பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான நேற்று, கழக உடன்பிறப்புகள் மேற்கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன்.

* கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் காட்டிய அன்பிற்கும் அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் - முதலமைச்சர் விஜய் 22-ந்தேதி தொடங்கி வைக்கிறார்

* முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் என்ற பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் என மாற்றியது.

* இடைத்தேர்தல் நடைபெறும் செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும்.

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

* சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திமுக பிரமுகரான பி.டி. அரசகுமாரை கைது செய்தனர்.

* அன்பில் மகேஷின் திருச்சி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com