ராமசாமி படையாட்சியாரின் மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்- முதலமைச்சர் விஜய்

மக்களின் உரிமைகளுக்காகக் களம்கண்டு, கல்வி, சமூக முன்னேற்றம், சம உரிமை ஆகியவற்றை முன்னிறுத்தி அவர் ஆற்றிய தொண்டும், முன்னெடுப்புகளும், தமிழக அரசியல் களத்தில் அழியாத தடம் பதித்துள்ளன.
ராமசாமி படையாட்சியார்- முதலமைச்சர் விஜய்
ராமசாமி படையாட்சியார்- முதலமைச்சர் விஜய்
Published on
Summary

சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் நிறுவனரும், மறைந்த முன்னாள் அமைச்சருமான பெரியவர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் 109-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

மகத்தான மக்கள் பணி

சமூக நீதிக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கும் அயராது பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.

மக்களின் உரிமைகளுக்காகக் களம்கண்டு, கல்வி, சமூக முன்னேற்றம், சம உரிமை ஆகியவற்றை முன்னிறுத்தி அவர் ஆற்றிய தொண்டும், முன்னெடுப்புகளும், தமிழக அரசியல் களத்தில் அழியாத தடம் பதித்துள்ளன. இந்நாளில் அவரது மக்கள் நலப்பணிகளைப் போற்றிடுவோம் என கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com