முதலமைச்சர் விஜய் நாளை காலை சென்னை திரும்புகிறார் - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு

லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யவும், தொழிலை விரிவாக்கம் செய்யவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்
Published on
Summary

லண்டன் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ள முதலமைச்சர் விஜய் நாளை காலை 8 மணிக்கு சென்னை திரும்புகிறார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் கடந்த 10-ந்தேதி லண்டன் சென்றார். அங்கு நடிகர் அஜித்குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை அவர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியை முடித்த பிறகு லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யவும், தொழிலை விரிவாக்கம் செய்யவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு சுமார் ரூ.12 ஆயிரத்து 300 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகள், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டனில் தங்கி உள்ள அவர் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசி உள்ளார். தனது ரசிகர்களை தி ஷார்ட் நட்சத்திர விடுதியில் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.

லண்டன் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ள முதலமைச்சர் விஜய் நாளை காலை 8 மணிக்கு சென்னை திரும்புகிறார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com