எ.வ.வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்

எ.வ.வேலு வெற்றியை எதிர்த்து த.வெ.க. வேட்பாளர் அருள் ஆறுமுகம், சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
சென்னை ஐகோர்ட்
சென்னை ஐகோர்ட்
Published on
Summary

திருவண்ணாமலை திமுக எம்எல்ஏ எ.வ.வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு 2,455 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

மனு தாக்கல்

அவரது வெற்றியை எதிர்த்து த.வெ.க. வேட்பாளர் அருள் ஆறுமுகம், சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எ.வ.வேலு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, தேர்தல் வழக்கை விசாரிப்பதற்கு எந்த காரணமும் இல்லை எனக்கூறி, தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகத்தின் தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.

இதுவரை த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா, பெருந்துறை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ராஜினாமா செய்த ஜெயக்குமார், கோபிசெட்டிப்பாளையம் எம்எல்ஏ செங்கோட்டையன், கோவை தெற்கு தி.மு.க. எம்எல்ஏ செந்தில்பாலாஜி ஆகியோருக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com