தாதா சாகேப் பால்கே விருது பெறுகிறார் கன்னட நடிகர் ஆனந்த் நாக்

கடந்த ஆண்டு கேரளாவின் மோகன்லால் தாதா சாகேப் பால்கே விருது பெற்றார்.
anant nag
Published on
Summary

கன்னட நடிகரான ஆனந்த் நாக்கிற்கு நாட்டின் உயரிய திரைப்பட விருதான 'தாதா சாகேப் பால்கே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது.

இந்நிலையில், 2024-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது கன்னட நடிகர் ஆனந்த் நாக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவிற்கு அவர் அளித்த பங்களிப்புக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் கெவாடியாவில் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த உயரிய விருது நடிகர் அனந்த் நாக்கிற்கு வழங்கப்படவுள்ளது.

தாதா சாகேப் பால்கே விருதுடன் தங்கத் தாமரை பதக்கம், பொன்னாடை மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு ஆகியவை அடங்கும்.

ஏற்கனவே, கடந்த 2025-ம் ஆண்டில் ஆனந்த் நாக் இந்தியாவின் 'பத்ம பூஷன்' விருதை பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு கேரளாவின் மோகன்லால் தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com