தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ஊழல் வழக்கு பதிவு

அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருவதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Published on
Summary

தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ளனர்.

தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் இருந்தபோது தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், பள்ளி தர உயர்வு அனுமதி பெற்றுத் தருவதாக பணம் வசூலித்து மோசடி செய்ததாக தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் இளங்கோவன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்ததின் பேரில் பி.டி.அரசகுமார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சோதனை

இந்த புகார் தொடர்பாக இன்று திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அன்பில் மகேஷின் திருச்சி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ளனர்.

வங்கி கணக்குகள் முடக்கம்

இந்த வழக்கு தொடர்பாக மத்திய குற்ற பிரிவு போலீஸ் தரப்பில் கூறியதாவது:- வழக்கு தொடர்பாக இதுவரை 250-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 177 தனியார் பள்ளிகளிடம் பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு நம்பிக்கை மோசடி நடந்துள்ளது. மோசடி தொடர்பாக பி.டி.அரசகுமாரின் 20 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருவதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com