

அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தை இந்தியாவில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் நடந்து வரும் ஐ.பி.எல். தொடரின் மூலம் சிறந்த வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கான வீரர்களை தேர்வு செய்வதற்காக ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு ஐ.பி.எல். ஏலம் இந்தியாவில் நடத்தப்பட்டது.
அதன்பின் 2024, 2025, 2026-ம் ஆண்டுகளில் ஐ.பி.எல். ஏலங்கள் துபாய், ஜெட்டா, அபுதாபி போன்ற வெளிநாடுகளில் நடத்தப்பட்டன.
இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தை இந்தியாவில் நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு மினி ஏலம் நடத்தப்பட உள்ளது.
அணிகளின் நிர்வாகக் குழுவினர் வெளிநாடு செல்வதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏலம் இந்தியாவில் நடைபெறுவது உறுதியாகிவிட்டாலும், எங்கு நடக்கும் என முடிவாகவில்லை.
2028-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மெகா ஏலம் வெளிநாட்டில் நடத்தப்படலாம் என தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஐ.பி.எல். ஏலம் மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.