தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: செப்.25-ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்

முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் காரணமாக இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
CM Vijay
Published on
Summary

தாய்மாமன் தங்க மோதிர திட்டம் செப்டம்பர் 25-ந்தேதி தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தவெக அரசின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான 'தாய்மாமன் சீர் திட்டம்' செப்டம்பர் 15-ந்தேதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று முறைப்படி தொடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் காரணமாக இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் செப்டம்பர் 25-ந்தேதி தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை மதுரையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்.

தமிழக பாரம்பரிய மரபின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

ஜூன் 22, 2026 முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு இத்திட்டம் பொருந்தும். ஆண்டுதோறும் சுமார் ரூ. 755.83 கோடி இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிக்கவும், ஏழை எளிய குடும்பங்களின் தாய்மையின் மகிழ்ச்சியைக் கௌரவிக்கும் வகையிலும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com