என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
    X

    குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

    • கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.
    • பழைய குற்றால அருவிகளில் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.

    இதன் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    நேற்று மெயின் அருவி மற்றும் ஐந்தருவி தவிர்த்து மற்ற அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    நேற்று இரவு மற்றும் இன்று காலையில் வனப்பகுதிக்குள் மழைப்பொழிவு குறைந்து வெயில் அடிக்க தொடங்கியதால் அருவிகளுக்கு வரும் தண்ணீர் வரத்தும் சீரானது.

    இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்தனர்.

    Next Story
    ×