search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மாண்டேகார்லோ டென்னிஸ்- ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
    X

    மாண்டேகார்லோ டென்னிஸ்- ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

    • லோரென்சோவிடம் 6-4, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் தோற்று கால் இறுதிக்கு வாய்ப்பை இழந்தார்.
    • ஜெர்மனி வீரர் ஸ்வேரெவ்வுரு3-வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    மாண்டேகார்லோ:

    மாண்டேகார்லோ சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவர் இத்தாலி வீரர் லோரென்சோவிடம் 6-4, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் தோற்று கால் இறுதிக்கு வாய்ப்பை இழந்தார்.

    அதேபோல் ஜெர்மனி வீரர் ஸ்வேரெவ்வுரு3-வது சுற்றில் தோல்வி அடைந்தார். இன்று நடக்கும் கால் இறுதி ஆட்டங்களில் ரூப்லேவ் (ரஷியா)-சன லென்னார்ட் (ஜெர்மனி), சிட்சிபாஸ் (கிரீஸ்)-டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) மெத்வதேவ் (ரஷியா)-ஹோல்கர் ரூன் (டென்மார்க்), சின்னெர் (இத்தாலி)-லோரென்சோ (இத்தாலி) ஆகியோர் மோதுகிறார்கள்.

    Next Story
    ×