என் மலர்


வெப்
போதை பழக்கத்தால் சீரழியும் 4 பெண்கள் குறித்த கதை.
ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் 4 இளம்பெண்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகி இரவு நேரங்களில் கிளப்பில் வீக் என்ட் பார்ட்டியில் மது மயக்கத்தில் ஆட்டம், பாட்டம் என ஜாலியாக இருந்து வருகின்றனர். ஒருநாள் இரவு பார்ட்டி முடிந்து மதுமயக்கத்தில் காரில் செல்லும் போது மர்ம நபரால் கடத்தப்படுகின்றனர். அவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? இவர்கள் தப்பித்தார்களா? என்பதே மீதி கதை.


படத்தின் முதல் பாதியை ஒரு கோணத்திலும், இரண்டாம் பாதியை இன்னொரு கோணத்திலும் காட்டியிருக்கிறார் இயக்குனர் ஹாரூன். ஒரு சாதாரண கதைக்களத்தை எடுத்து அதை திரைக்கதையின் மூலம் சுவாரஸ்யமாக்க இயலவில்லை இயக்குனரால்.


ஒளிப்பதிவாளர் கிரிஷ்டோபர் ஜோசப் அவரின் பணியை சரியாக செய்துள்ளார். கார்த்திக் ராஜாவின் இசை படத்திற்கு உதவியுள்ளது.
மொத்த 'web' - சர்வர் டவுன்.









