என் மலர்


வல்லமை
கதைக்களம்
அனாதயாக இருக்கும் பிரேம்ஜி காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறக்கிறது. ஒரு எதிர்பாராத விபத்தில் பிரேம்ஜியின் மனைவி இறந்துவிடுகிறார். அதற்கு பிறகு அந்த கிராமத்தில் இருந்து தன் மகளுடன் சென்னைக்கு வருகிறார்.
இங்கு வந்து கிடைத்த வேலையை செய்துக் கொண்டு , வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
மகளை பள்ளிகூடத்தில் சேர்த்து விட்டு அவளை எப்படியாவது ஆளாக்கிடவேண்டும் என நினைத்து வாழ்ந்து வருகிறார்.
ஒருநாள் பிரேம்ஜியின் மகள் வயதுக்கு வருகிறாள். அதில் குழப்பமடைந்த பிரேம்ஜி மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்காக செல்கிறார். ஆனால் அங்கு மருத்துவர்கள் சிறுமி அவருக்கே தெரியாமல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. தனக்கு நேர்ந்த அநீதி இனி யாருக்கும் நடக்க கூடாது, என்று எண்ணும் சிறுமி, தன்னை சீரழித்த குற்றவாளி யார்? என்பதை கண்டுபிடித்து அவரை கொலை செய்ய வேண்டும் என அவளும் பிரேம்ஜியும் முடிவுக்கு வருகின்றனர். இதற்கு அடுத்து என்ன ஆனது? இந்த குற்றத்திற்கு பின்னால் இருக்கும் மர்ம நபர்கள் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
வழக்கமாக நாம் பார்த்த பிரேம்ஜி கதாப்பாத்திரத்தில் இருது முற்றிலும் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்க முயற்சித்துள்ளார் அதற்கு பாராட்டுகள். என்மோஷ்னல் காட்சிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்திருக்கவேண்டும். பிரேம்ஜியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி திவதர்ஷினி, தனக்கு நேர்ந்த அநீதிக்கு பழிதீர்ப்பதற்கு தன் குழந்தை முகத்தோடு அதற்கான காரணத்தை சொல்லும் போது, பார்வையாளர்களின் இதயம் கனக்கச் செய்கிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ’வழக்கு எண்’ முத்துராமன், போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் சூப்பர் குட் சுப்பிரமணியம், தொழிலதிபராக நடித்திருக்கும் சி.ஆர்.ரஜித், கார் ஓட்டுநராக நடித்திருக்கும் சுப்பிரமணியன் மாதவன், பெட்ரோல் திருடும் இளைஞராக நடித்திருக்கும் விது, பள்ளி உதவி பணியாளராக நடித்திருக்கும் திலீபன் என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
இயக்கம்
பெண் பிள்ளைகளில் பாதுகாப்பற்ற சமூக நிலைமையை மிக ஆழமாக பதிவு செய்ய முயற்சித்துள்ளார் இயக்குனர் கருப்பையா முருகன். பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் பெண்களின் மனநிலையும் , உடல் ரீதியாக அவர்கள் எவ்வாறு பாதிப்படைகிறார்கள் என பதிவு செய்துள்ளார். படத்தின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும். காட்சியமிப்பில் கோர்வை இல்லாமல் இருக்கிறது பலவீனம்.
ஒளிப்பதிவு
இசையமைப்பாளர் ஜி.கே.வி யின் இசை கேட்கும் ரகம்.
தயாரிப்பு
Battlers Cinema - Karuppaiya Murugan இப்படத்தை தயாரித்துள்ளார்.









