என் மலர்


தண்டர்போல்ட்ஸ்
MCU வின் அடுத்த திரைப்படமாக உருவாகியுள்ளது தண்டர்போல்ட்ஸ்
கதைக்களம்
எலனா ஒரு அஸாசினாக ஒரு ஏஜென்சியிடம் வேலைப்பார்த்து வருகிறாள்.இந்த ஏஜென்சிக்கு தலைமை பொறுப்பில் வெலிடினா இருக்கிறார். ஒவ்வொரு வேலையையும் திறமையாக முடிக்கிறார் எலனா. ஆனால் இவரது உழைப்பு எதுவும் வெளி உலகத்திற்கு தெரிவதில்லை என்பதால் எலனா தனக்கு புகழ் வரும்படியான வேலைகளை கொடுக்குமாறு வெலிடினாவிடம் கேட்கிறார்.
அதற்காக வெலிடினா ஒரு ப்ராஜக்டை கொடுகிறார். அதில் ஒரு இடத்திற்கு அனுப்புகிறாள் அங்கு யார் வருகிறார்களோ அவர்களை கொலை செய்ய வேண்டும் என்பதே டாஸ்க். ஆனால் அங்கு போன பிறகு தான் தெரிகிறது அந்த இடத்தில் மேலும் 3 சூப்பர் ஹீரோக்கள் இருக்கிறார்கள் மேலும் இவர்களை ஒருவரை ஒருவர் மாறி மாறி கொள்வதற்கான திட்டம் இது என அனைவருக்கும் புரிய வருகிறது.
அங்கு பாப் என்ற ஒரு கதாப்பாத்திரம் இருக்கிறது அவனை காப்பாற்றி விட்டு எல்லோரும் அங்கு இருந்து தப்பிக்கின்றனர். பாப் ஆரம்பத்தில் ஒரு சாதாரண மனிதனைப் போல காண பிறகுதான் தெரிகிறது பாப் ஒரு அசாத்திய சூப்பர் ஹ்யூமன் என. வெலிடினா ஏன் இவர்களை கொல்ல நினைத்தாள்? இதற்கு பின்னணி என்ன? பாப் யார்? அவனுக்குள் எப்படி இந்த அபார சக்தி வந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கும் எலனா படத்தை தன் தோளில் சுமந்துள்ளார். அவர் வரும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார். பிற நடிகர்களில் நடிப்பு மனதில் பதியவில்லை. இரும்பு கை மனிதன் மற்றும் கேப்டன் அமெரிக்கா கதாப்பாத்திரங்களை மனதில் ஏற்க நேரம் எடுக்கிறது.
இயக்கம்
மார்வலின் யூவனிவர்சில் ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார் ஜேக். மார்வல் படங்களுக்கே உரிய காமெடி காட்சிகள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. பரீட்சய படாத கதாப்பாத்திரங்கள் தான் அடுத்த அவெஞ்சர்ஸ் என்று சொல்வது ரசிகர்களால் ஏற்றுகொள்ள முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. மாஸ் மற்றும் கூஸ்பம்ப்ஸ் மொமண்ட்ஸ் என எதுவும் இல்லை. படத்தின் டெக்னிகல் மற்றும் சி ஜி காட்சிகளை மிக அட்டகாசமாக செய்துள்ளனர்.
இசை
சான் லக்ஸ்-இன் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலத்தை சேர்த்துள்ளது.
தயாரிப்பு
மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.










