என் மலர்


ஸ்ட்ரைக்கர்
ஆவிகளுடன் பேசும் முயற்சி எப்படி விபரீதமாக மாறுகிறது என்பது குறித்த கதை.
கதைக்களம்
ஆவிகளுடன் பேசும் ஒருவரைப் பேட்டி எடுக்க யூடியூபரான கதாநாயகி வருகிறார். ஓஜா போர்டு மூலம் இறந்து போன ராஜேந்திரன் ஆவியோடு பேச ஆரம்பிக்கிறார்கள். அப்படி ஆவியுடன் பேசும் முயற்சியை நாயகன் தொடரும்போது அந்த ஆவி கதாநாயகி உடம்பில் புகுந்து அவர் குரலில் பேசி எச்சரிக்கிறது. பிறகு அந்த முயற்சியில் ஈடுபடும் நாயகன், நாயகியை ஆவி ஆட்டி வைக்கிறது.
இறுதியில் இது எப்படி முடிவுக்கு வந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதாநாயகன் ஜஸ்டின் விஜய் நடிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். வித்யா பிரதீப் கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இயக்கம்
ஆவியை வரவழைத்து ஆவியுடன் பேசும் காட்சிகளில் பரபரப்பையும் பதற்றத்தையும் பார்வையாளர்களுக்கு கடத்தியுள்ளார் இயக்குனர் எஸ்.ஏ.பிரபு. ஆனால் ஆவிகளுடன் பேசும் ஓர் அம்சத்தை மட்டுமே பிரதானப்படுத்தி திரைக்கதை அமைத்துள்ளது சற்று சலிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இசை
விஜய் சித்தார்த் இசை ஓகே.
ஒளிப்பதிவு
மனீஷ் மூர்த்தி ஒளிப்பதிவு பார்வையாளர்களுக்கு படத்தின் தன்மையை கடத்தியிருக்கிறது.
படத்தொகுப்பு
நாகூரன் படத்தொகுப்பு பரவாயில்லை.
சவுண்ட் எபெக்ட்
சேது சவுண்ட் மிக்ஸிங் ஒட்டவில்லை.
புரொடக்ஷன்
ஏ.எஸ்.டபில்யூ நிறுவனம் 'ஸ்ட்ரைக்கர்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.









