என் மலர்


ஸ்கூல்
வெற்றி, தோல்வி மட்டுமே வாழ்க்கையில் குறிக்கோளாக இருக்க கூடாது என்பதை கூறும் திரைப்படமாக உருவாகியுள்ளது.
கதைக்களம்
மாணவ, மாணவிகளை ஊக்குவிப்பதற்காக பள்ளி தலைமை ஆசிரியர் பகவதி பெருமாள் மைன்ட் செட் ஆப் சக்சஸ் என்ற புத்தகத்தை எழுதி வெளியிடுகிறார். புத்தகத்தை படிக்கும் மாணவர்கள் வெற்றி மட்டும் தான் வாழ்க்கை என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மேலும் சில மாணவ, மாணவிகள் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதை தொடர்ந்து பள்ளியில் அமானுஷ்ய சக்திகள் நடமாட்டம் அதிகமாக, மாணவர்களுக்கிடையே பிரச்சனைகள் வருகிறது. மேலும் முன்னாள் ஆசிரியர்களான பூமிகா, யோகிபாபு மீண்டும் பள்ளியில் பணியில் சேர்கின்றனர். இவர்களை பார்த்து அமானுஷ்ய சக்திகளின் வேகம் குறைகிறது.
இறுதியில் அமானுஷ்ய சக்திகளின் பின்னணி என்ன? பூமிகா, யோகி பாபுவை பார்த்து அமானுஷ்ய சக்தி பயப்பட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் கனகவேல் ஆசிரியர் கதாபாத்திரத்தில் யோகிபாபு வரும் காட்சிகள் காமெடியும் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. மாணவர்களை ஊக்கப்படுத்த அவர் பேசும் வசனங்கள் கைத்தட்டலை பெறுகிறது. மற்றொரு ஆசிரியையாக வரும் பூமிகா அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் கே.எஸ். ரவிக்குமார், தலைமை ஆசிரியர் பகவதி பெருமாள், சாம்ஸ், நிழல்கள் ரவி ஆகியோர் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர்.
இயக்கம்
வெற்றி, தோல்வி மட்டுமே வாழ்க்கையில் குறிக்கோளாக இருக்க கூடாது. வாழ்க்கையை சுலபமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என படத்தின் மூலம் விழிப்புணர்வு கொடுத்து உள்ளார் இயக்குனர் வித்யாதரன். பல காட்சிகள் செயற்கை தனமாகவும், லாஜிக்கே இல்லாமலும் இருக்கிறது. திரைக்கதை வலுவில்லாமல் செல்கிறது. சில இடங்களில் வசனங்களின் நீளத்தை குறைத்திருக்கலாம்.
இசை
இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறது.
ஒளிப்பதிவு
திகில் சம்பவங்களை சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஆதித்யா கோவிந்தராஜ்.
தயாரிப்பு
Quantum Film பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.










