search icon
என் மலர்tooltip icon
    < Back
    Pathu thala
    Pathu thala

    பத்து தல

    இயக்குனர்: கிருஷ்ணா
    எடிட்டர்:பிரவீன் கே.எல்
    ஒளிப்பதிவாளர்:ஃபரூக் ஜே. பாஷா
    இசை:ஏஆர் ரகுமான்
    வெளியீட்டு தேதி:2023-03-30
    Points:3801

    ட்ரெண்ட்

    வாரம்123456
    தரவரிசை246456484532
    Point2556883251761916
    கரு

    தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் தாதாவை பிடிக்க போலீஸ் போடும் திட்டம்.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    கன்னியாகுமரியில் தொழிலதிபராகவும் பிரபல தாதாவாகவும் இருக்கிறார் ஏஜிஆர் என்கிற சிம்பு. இவர் யாரை சொல்கிறாரோ அவர் தான் அடுத்த முதலமைச்சர் என்ற அளவுக்கு செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார். இது ஒரு புறம் இருக்க முதலமைச்சர் சந்தோஷ் பிரதாப்பை திடீரென சிலர் கடத்தி விடுகின்றனர்.

    முதல்வரை கண்டு பிடிக்க சிபிஐ களம் இறங்கி தீவிரமாக தேடி வருகிறது. முதலமைச்சரை கடத்தியது சிம்புவாக இருக்கும் என்று போலீசும் அவருக்கு நெருக்கடி கொடுக்கிறது. இதனிடையே கவுதம் கார்த்திக், சிம்புவிடம் அடியாளாக வேலைக்கு சேர்கிறார்.

    போலீஸ் ஒரு புறம் நெருக்கடி கொடுக்க, மறுபுறம் மக்கள் முன் சிம்புவை தவறானவனாக காட்ட துணை முதல்வர் கவுதம் மேனன் தீவிரமாக முயற்சி செய்கிறார். இறுதியில் கவுதம் மேனன் போடும் திட்டத்தில் சிம்பு சிக்கி கொள்கிறாரா? முதல்வரை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    ஏஜிஆர் கதாப்பாத்திரத்தில் வரும் சிம்பு நடிப்பின் மூலம் படத்தை தாங்கி பிடிக்கிறார். முதல் பாதியில் சில காட்சிகளில் மட்டுமே தோன்றி ரசிகர்களை ஏமாற்றினாலும் இரண்டாம் பாதியில் ரசிகர்களின் உணர்வுகளுக்கு தீணி போடுகிறார். மாஸ் ஆக்‌ஷன் காட்சிகளில் சிம்பு கலக்கி இருக்கிறார்.

    தான் சிறந்த நடிகர் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் கவுதம் கார்த்திக். இவர் பல காட்சிகளின் மூலம் கைத்தட்டல் பெறுகிறார்.

    அரசியல்வாதியாக வரும் கவுதம் மேனன் எதார்த்த நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்கிறார். கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துள்ளார் பிரியா பவானி சங்கர். சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தாலும் கவனிக்க வைத்திருக்கிறார் சவுந்தரராஜா. சாயிஷாவின் குத்தாட்டம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

    இயக்கம்

    துரோகம், அரசியல், வெறுப்பு, கோபம் என அனைத்தையும் ஒன்றினைத்து படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் ஒபிலி என்.கிருஷ்ணா. மாஸ் காட்சிகளின் வழியாக ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். கூட இருப்பவர்கள் துரோகியாக மாறுவதும், உளவாளியான போலீஸ் என பழைய பாணியை பின்பற்றியுள்ளார்.

    திரைக்கதையில் சற்று விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம். முதல் பாதியில் சிம்பு சிறிது நேரமே வந்தாலும் இரண்டாம் பாதியில் அதனை சமரசம் செய்து நியாப்படுத்துகிறார்.

    இசை

    படத்திற்கு கூடுதல் பலமாக ஏ.ஆர்.ரகுமானின் இசை அமைந்துள்ளது. பின்னணி இசையில் அட்டகாசம் செய்துள்ளார். பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும் சாயிஷா ஆடியுள்ள ராவடி பாடல் திணிக்கப்பட்டது போன்று தோன்றுகிறது.

    ஒளிப்பதிவு

    ஃபருக் பாஷாவுடைய ஒளிப்பதிவு விருந்து படைத்துள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளை அழகாக பதிவு செய்துள்ளார்.

    படத்தொகுப்பு

    பிரவீன் கே.எல். படத்தொகுப்பு அருமை.

    காஸ்டியூம்

    உத்ரா மேனன் காஸ்டியூம் டிசைனில் கலக்கியிருக்கிறார்.

    புரொடக்‌ஷன்

    ஸ்டுடியோ கிரீன் மற்றும் பென் ஸ்டுடியோஸ் ‘பத்து தல’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×